News
Loading...

கமென்ட் கோயிந்து

கமென்ட் கோயிந்து

‘விஸ்வரூபம்’ பட பாணியில் எல்லையில் புறாக்களைப் பறக்க விடும் பாகிஸ்தான் தீவிரவாதிகள்: செய்தி
‘அதை அப்புடியே எங்க ஊரு பக்கம் பறக்க வுடுங்கடே... தீவாளிக்கி கறி எடுக்குற செலவாச்சும் மிச்சமாகும்!

தி.மு.க. அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டினால் பா.ஜ.க பங்கேற்காது: தமிழிசை 
வேணும்னா ஒபாமாவை அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட சொல்லுவோமா மேடம்?

தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் வார்டுகளுக்கு வேட்பாளர்களை நிறுத்துவோம்: திருநாவுக்கரசர்
ஒண்ணு நீங்க இருக்கீங்க, மிச்சம் தொண்ணூத்தி ஒம்பதாயிரத்து தொள்ளாயிரத்து தொண்ணூத்தி ஒன்பது பேருக்கு எங்கண்ணே போறது?

சிவகார்த்திகேயன் மட்டுமல்ல... நானும் பாதிக்கப்பட்டேன்: விஷால்
பொம்பள கெட்டப்ல ராத்திரியில வெளிய போகாதீங்கய்யான்னா கேட்டாதானே!

இயற்கை வளங்கள் சுரண்டப்படும்போது மக்களுக்குக் கோபம் வரவேண்டும்: சகாயம் ஐ.ஏ.எஸ்
‘‘கோவப்படுறதுக்கு எம்புட்டு காசு குடுப்பீங்க’’ன்னு கேட்டுருவாங்களோன்னு நெனைச்சாதான் சார்...

டெல்லி மெட்ரோ ரயிலில் இலவச ‘வைஃபை’: செய்தி
‘மொபைல்ல நெட்டு கனெக்ட் ஆகி முடிக்கறதுக்குள்ள இறங்க வேண்டிய ஸ்டேஷன் வந்துரும், அதான் ராசதந்திரம்!

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...