News
Loading...

வார ராசிபலன் - மகரம்

வார ராசிபலன் - மகரம்

14.10.2016 முதல் 20.10.2016 வரை

முன்ஜாக்கிரதையாக செயல்படும் மகர ராசி அன்பர்களே!

உறவினர்கள் வழியில் எதிர்பார்த்த உதவிகள் தள்ளிப்போகலாம். பொறுமையை கடைப்பிடிப்பது நல்லது.

உத்தியோகம்:   உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் அதிக கவனமாகச் செயல்படவேண்டும். எதிர்பார்த்த காரியங்கள் தள்ளிப் போகலாம்.

தொழில்:  சொந்தத்தொழில் செய்பவர்கள் எதிர்பார்க்கும் லாபம் இருக்காது. பணியாளர்களின் கோரிக்கைகளுக்குப் பதிலளிக்க வேண்டியிருக்கலாம். கூட்டுத் தொழிலில் கூட்டாளிகளின் இடையூறு இருக்கலாம். புதிய கூட்டாளியை சேர்த்துக் கொள்ளும் முயற்சியில் இறங்குவீர்கள். பங்குச்சந்தை வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைப்பது அரிது.

கலை :  கலைத்துறையினர் சாமர்த்தியமாகச் செயல்பட்டு பணிகளில் வெற்றி பெறுவர். எதிர்பார்த்த வருமானம் கிடைப்பதில் சிரமங்கள் ஏற்படலாம்.

குடும்பம் :    குடும்பத்தில் பொருளாதார ஏற்ற இறக்கங்கள் ஏற்படலாம். மகன் அல்லது மகளின் திருமணத்திற்கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள்.

வார வழிபாடு:– சனிக்கிழமையன்று ஆஞ்சநேயருக்கு வெற்றிலை
மாலை சூட்டி வழிபாடு செய்தால் வெற்றிகள் குவியும்.

அதிர்ஷ்ட எண்கள்:– 5,8,9 
அதிர்ஷ்ட நிறம்:– கருநீலம்

அதிர்ஷ்டக்கிழமை:– சனி

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.