News
Loading...

நாயிடம் பால் குடிக்கும் ஆட்டுக்குட்டி

நாயிடம் பால் குடிக்கும் ஆட்டுக்குட்டி

சேரன்மகாதேவியை அடுத்த கங்கானாங்குளத்தில் நாயிடம் பால் குடித்து வளரும் ஆட்டுக்குட்டியை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்துச் செல்கின்றனர். நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவியை அடுத்த கங்கானங்குளம் பி.எச்.பாண்டியன் நகரைச் சேர்ந்த சாமுவேல் மகன் ஜேம்ஸ் முருக பெருமாள்(35). விவசாயியான இவர் தனது வீட்டில் பப்பி என்ற பெண் நாயை கடந்த 2 ஆண்டுகளாக வளர்த்து வருகிறார். இந்த நாய் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வீட்டில் குட்டி போட்டுள்ளது.

இந்நிலையில் ஜேம்ஸ் கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் தனது உறவினர் வீட்டிலிருந்து பிறந்து சில நாட்களே ஆன ஆட்டுக்குட்டியை தூக்கி வந்து தனது வீட்டில் வளர்த்து வருகிறார். இந்த ஆட்டுக்குட்டி வழக்கத்திற்கு மாறாக நாய் குட்டிகளுடன் சேர்ந்து அதன் தாய் நாயிடம் தினமும் 2 வேளை பால் குடித்து வளர்ந்து வருகிறது. விசித்திரமாக நடந்து வரும் இந்நிகழ்வை அக்கம் பக்கத்தினர் நாள்தோறும் ஜேம்ஸ் வீட்டிற்கு ஆச்சரியத்துடன் வந்து கண்டு செல்கின்றனர்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...