News
Loading...

வார ராசிபலன் - மீனம்

வார ராசிபலன் - மீனம்

14.10.2016 முதல் 20.10.2016 வரை

நிர்வாகத் திறமை கொண்ட மீன ராசி அன்பர்களே!

எடுத்த காரியங்களில் எதிர்பாராத வெற்றி கிடைக்கும். சிலர் உங்களிடம் புதிய பொறுப்புகளை ஒப்படைக்கலாம்.

உத்தியோகம்:   உத்தியோகஸ்தர்கள், நிர்வாகத்திடம் வைத்த கோரிக்கைகள் நிறைவேறலாம். தொழிலில் ஏற்பட்ட சிக்கல்கள் விலகும்.

தொழில்:  சொந்தத் தொழில் செய்பவர்கள் வியாபாரத்தில் நல்ல ஏற்றம் காண்பர். மனதில் உற்சாகமும், நிம்மதியும் குடிகொள்ளும். கூட்டுத்தொழிலில் வியாபாரம் நன்கு நடைபெறும். எந்த வேலையையும் தடங்கலின்றிச் செய்து முடிப்பீர்கள். கூட்டாளிகளிடம் வீண் விவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. பங்குச்சந்தையில் லாபம் நன்றாக இருக்கும். புதிய நண்பர்களின் அறிமுகம் ஏற்படும்.

கலை :  கலைஞர்கள் தங்கள் பணிகளில் நல்ல திருப்பம் காணுவர்.  வரவும், வளர்ச்சியும் இருக்கும். புதிய வாய்ப்புகளைப் பெற முற்படுவீர்கள்.

குடும்பம் :    குடும்பத்தில் அவ்வப்போது தோன்றும் பிரச்சினைகளை சிக்கலின்றி சமாளித்து விடுவீர்கள்.  நவீனப் பொருட்களை வாங்கத் திட்டமிடுவீர்கள்.  

வார வழிபாடு:– செவ்வாய்க்கிழமையன்று துர்க்காதேவிக்கு
நெய் தீபமிட்டு வழிபட்டு வந்தால் நல்ல பலன் உண்டாகும்.

அதிர்ஷ்ட எண்கள்:– 1,5,9 
அதிர்ஷ்ட நிறம்:– சிவப்பு

அதிர்ஷ்டக்கிழமை:– செவ்வாய்

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.