News
Loading...

வார ராசிபலன் - துலாம்

வார ராசிபலன் - துலாம்

14.10.2016 முதல் 20.10.2016 வரை

எதிலும் சிந்தித்து செயலாற்றும் துலா ராசி அன்பர்களே!

செவ்வாய் பகல் 3 மணி முதல் வியாழன் மாலை 5.30 மணி வரை சந்திராஷ்டமம் உள்ளதால், அலைச்சல் அதிகரிக்கும்.

உத்தியோகம்:   உத்தியோகத்தில் உள்ளவர்கள் புதிய திருப்பம் காணலாம். அவசரம் காரணமாக கூடுதல் வேலைப்பளுவைச் சந்திக்கலாம்.

தொழில்:  சொந்தத்தொழில் செய்பவர்கள் அதிக லாபம் பெற்று மகிழக்கூடும். வீட்டில் வசதிகளை அதிகரிக்க முயற்சிகளை மேற்கொள்வீர்கள். கூட்டுத் தொழிலில் லாபம் அதிகரிக்கும். தொழில் ரீதியான தேக்க நிலை அகன்று சுறுசுறுப்பு ஏற்படும்.  முதலீட்டை அதிகரிக்க முற்படுவீர்கள். பங்குச்சந்தை பலன் தரும்.

கலை :  கலைஞர்கள் தொழில் சம்பந்தமான ஆலோசனைகளில் கவனம் செலுத்த நேரலாம்.  புதிய ஒப்பந்தங்கள் பயனுள்ளவைகளாக இருக்கலாம்.

குடும்பம் : குடும்பத்தில் பிரச்சினைகள் அகன்று மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும். சுப காரியங்கள் நடைபெறலாம். குடும்பப் பிரச்சினைகளில் பெரியவர்களின் ஆலோசனை தேவைப்படும்.

வார வழிபாடு:– வெள்ளிக்கிழமை சுக்ர பகவானுக்கு நெய் தீபம்
ஏற்றிவைத்து வழிபாடு செய்தால் நல்ல பலன்களைத் தரும்.

அதிர்ஷ்ட எண்கள்:– 2,6,9 
அதிர்ஷ்ட நிறம்:– சிவப்பு

அதிர்ஷ்டக்கிழமை:– வெள்ளி

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...