News
Loading...

ரோபோ சுவடுகள்: ஒளியில் இயங்கும் குட்டி ரோபோ!

ரோபோ சுவடுகள்: ஒளியில் இயங்கும் குட்டி ரோபோ!

ரோபோக்களை உருவாக்கும் விஞ்ஞானிகள் இயற்கையின் படைப்புகளை பார்த்து காப்பியடிப்பது சுலபம் என்ற முடிவுக்கு வந்திருக்கின்றனர். போலந்திலுள்ள, வார்சா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ரோபோ வல்லுனர்கள்,15 மி.மீ., நீளமுள்ள குட்டி ரோபோவை தயாரித்துள்ளனர். இது சுட்டுவிரல் நுனியில் வைக்கக்கூடிய அளவுக்கு குட்டியூண்டுதான் இருக்கிறது. இதற்கு உந்துதலாக இருந்தது புழுக்கள்தான். 

புழுவைப் போலவே நெளிந்து நெளிந்து பயணிக்கும் இந்த ரோபோவுக்கு பச்சை நிற ஒளிதான் உந்து சக்தியை தருகிறது. இதற்கென உருவாக்கப்பட்ட லேசர் கருவியிலிருந்து கிளம்பும் கதிர்தான் இதை கட்டுப்படுத்துகிறது. 'லிக்விட் கிறிஸ்டலைன் எலாஸ்டோமெர்' எனப்படும், 'புத்திசாலி பொருள்' மூலம் உருவாக்கப்பட்ட இந்த சிறு பிசிறு போன்ற ரோபோவை ஒளியின் மூலம் துாண்டி, கட்டுப்படுத்த முடியும் என்று வார்சா விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். 

உண்மையில் வழக்கமான ரோபோக்களுக்கு உள்ள சிலிக்கன் சில்லு மூளை இந்த ரோபோவுக்கு இல்லை. ஆனால், ஒளியின் துாண்டுதல் மூலம் அசைந்து முன்னேறவும், மேடுகளில் ஏறவும், ஒரு துளையின் உள்ளே புகுந்து வெளியே வரவும், இந்த குட்டி ரோபோவால் முடியும். தவிர, அதன் எடையை விட, 10 மடங்கு எடையையும் சுமந்து பயணிக்க முடியும். இதுபோன்ற மில்லிமீட்டர் மற்றும் நேனோ அளவிலான ரோபோக்களை தண்ணீரில் நீந்தவும், காற்றில் பறக்கவும் வைக்க முடியும் என்கின்றனர், வார்சா விஞ்ஞானிகள்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...