News
Loading...

கமென்ட் கோயிந்து

கமென்ட் கோயிந்து

மாண்புமிகு’ ஆளுநர் என அழைக்க வேண்டும்: வித்யாசாகர் ராவ்
நல்லவேளை, ‘இதய தெய்வம்’, ‘தமிழகத்தின் நிரந்தர ஆளுநர்’னு எல்லாம் கூப்பிடச் சொல்லலை!

விரைவில் வருகிறது 2000 ரூபாய் நோட்டு, அச்சடிக்கும் பணிகள் தொடக்கம்: செய்தி
ஐந்நூறு ரூபாய்க்கு சில்லறை வாங்கவே படாதபாடு பட வேண்டியதா இருக்கு... இதுல ரெண்டாயிரம் ரூவா நோட்டாம்ல! போங்கய்யா அங்கிட்டு...

பிச்சை எடுப்பது தவறில்லை: மத்திய அரசு
விட்டா இவங்களே ஐ.டி. கார்டு போட்டுக் குடுத்து, வரிச் சலுகையும் செஞ்சி குடுப்பாய்ங்க போல...

துபாயில் மனைவியை மேக்கப் இல்லாமல் பார்த்ததால் விவாகரத்து செய்த கணவர்: செய்தி
அப்படிப் பார்த்தா நாங்கல்லாம் ஒரு நாளைக்கு நானூறு தடவை டைவர்ஸ் பண்ணணும்... போங்கய்யா யோவ்!

தீபாவளியை முன்னிட்டு ஏர் இந்தியா விமான சேவையில் ஒரு டிக்கெட்டுக்கு ஒரு டிக்கெட் இலவசம்: செய்தி
அதை இந்த கோயம்பேடு ஆம்னி பஸ் காரங்க காதுல விழுற மாதிரி நல்லா சத்தமா சொல்லுங்கண்ணே...

பள்ளி பாத்ரூம் கதவைக் கழற்றி காயலான் கடையில் விற்ற மாணவர்கள்: செய்தி
இனிமே யாரும், பள்ளிக்கூடத்துக்குப் போயி படிச்சு என்னத்தை ‘கழட்டுன’னு கேக்க முடியாதுல்ல!

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...