News
Loading...

கமென்ட் கோயிந்து

கமென்ட் கோயிந்து

ரூ.65,250 கோடி கறுப்புப் பணம் மீட்பு: அருண் ஜெட்லி
சரிண்ணே, வந்த வரைக்கும் கணக்கு போட்டு என் பங்கு 15 லட்சத்துல எவ்ளோ ரொக்கம் வருதோ, அதைப் பிரிச்சி குடுங்க!

அ.தி.மு.க, தி.மு.க, காங்கிரஸ், பா.ஜ.கவுடன் மக்கள் நலக் கூட்டணி இணைந்து போட்டியிடாது: வைகோ
ஒபாமா கூட கூட்டணி வச்சி வாஷிங்டன் தொகுதியில நிற்கப் போறாரு போல!

வேட்பாளரை மாற்றக் கோரி செல்போன் டவர் மீது ஏறி அ.தி.மு.க.வினர் போராட்டம்: செய்தி
அண்ணே, ஒங்களை எல்லாம் கட்சிய விட்டு தூக்கி பத்து நிமிஷமாச்சாம்! கீழ இறங்கிப் போயி வேற பொழப்பை பாருங்கண்ணே!

உள்ளாட்சித் தேர்தலில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தனித்துப் போட்டி: ஜி.கே.வாசன்
இவரு வச்சிருக்கறதும் கட்சிதான்னு இவரோட ஆழ் மனசுல யாரோ நம்ப வச்சிருக்காய்ங்க!

பெட்ரோல் விலை உயர்வு, டீசல் விலை குறைப்பு: செய்தி
என்ன எஜமான் இது? உங்க ஆட்டையிலயே புது ரகமால்ல இருக்கு!

திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் மின்விசிறி கழன்று விழுந்ததில் 2 பேர் காயம்: செய்தி
இப்ப புரியுதுய்யா... ஏன் முதலமைச்சரம்மா தனியார் ஆஸ்பத்திரிக்கு போனாங்கன்னு!

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...