News
Loading...

சிம்ம ராசி நேயர்களுக்கான அக்டோபர் மாத ராசிபலன்

சிம்ம ராசி நேயர்களுக்கான அக்டோபர் மாத ராசிபலன்

1-10-2016 முதல் 31-10-2016 வரை

கணித்தவர் : நவக்கிரக ரத்னஜோதி சந்திரசேகரபாரதி

சிம்மம்: (மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம் வரை)

பொது: குரு, சுக்கிரன் ஆகியோர் சாதகமாக உலவுகிறார்கள். 3-ஆம் தேதி முதல் புதன் 2-ஆமிடம் மாறுவது விசேடமாகும். 13-ஆம் தேதி முதல் சுக்கிரன் 4-ஆமிடம் மாறுவது நல்லது. 17-ஆம் தேதி முதல் சூரியன் 3-ஆமிடம் மாறுவது நல்லது. 21-ஆம் தேதி முதல் புதன் 3-ஆமிடம் மாறுவது குறை. ராகு, கேது, சனி ஆகிய கிரகங்களுக்கு அர்ச்சனை, ஆராதனைகளைச் செய்து வருவது அவசியமாகும்.

ஆரோக்கியம், குடும்பம்: இதயம், தோல் சம்பந்தமான உபாதைகள் ஏற்படும். குடும்ப நலம் சிறக்கும். சுப காரியங்கள் நிகழ வாய்ப்புக் கூடிவரும். மக்களாலும், வாழ்க்கைத்துணைவராலும் நலம் உண்டாகும். நண்பர்கள், உறவினர்களால் நல்லதும் அல்லாததும் கலந்தவாறு பலன்கள் ஏற்படும். புதியவர்களிடம் எச்சரிக்கை தேவை.

பொருளாதார நிலை: பண நடமாட்டம் பெருகும். கடன் தொந்தரவு குறையும். பாக்கிப் பணம் வசூலாகும். கொடுக்கல்-வாங்கல் லாபம் தரும். புதிய துறைகளில் முதலீடு செய்வீர்கள்.

நிலபுலங்கள்: சொத்துக்கள் சம்பந்தமான பிரச்னைகள் ஏற்படும். சனிப் பிரீதி செய்து கொள்வது நல்லது.

தொழில்: பேச்சின் மூலம் தொழில் புரிபவர்கள் வளர்ச்சி காண்பார்கள். உத்தியோகஸ்தர்களது நிலை உயரும். கலைஞர்கள் வெற்றி நடைபோடுவார்கள். மருத்துவம், இரசாயனம், விஞ்ஞானம், ஆன்மிகம் போன்ற இனங்களைச் சேர்ந்தவர்களுக்குச் செழிப்பான சூழ்நிலை நிலவிவரும்.

மாதர்களுக்கு: உற்சாகமான சூழ்நிலை நிலவிவரும். நல்ல தகவல் வந்து சேரும். புதிய ஆடை, அணிமணிகளை வாங்குவீர்கள். கேளிக்கை, உல்லாசங்களில் ஈடுபாடு கூடும். 

மாணவர்களுக்கு: வெற்றி வாய்ப்புக்கள் அதிகரிக்கும். ஆசிரியர்களின் நல்லெண்ணங்களுக்குப் பாத்திரமாவீர்கள்.

சந்திராஷ்டமம்: அக்டோபர் 14, 15, 16 (முற்பகல்).

அதிர்ஷ்ட தேதிகள்: அக்டோபர் 2, 3, 5, 6 (முற்பகல்), 11, 16 (பிற்பகல்), 19, 28, 30

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.