News
Loading...

அபூர்வ விலை பொருட்கள்

அபூர்வ விலை பொருட்கள்

1995ல் தொடங்கப்பட்ட இபே மூலம் பல லட்சக்கணக்கான பொருட்கள் ஏலத்தில் விலை போயுள்ளன. இதோ, அதிலும் அபூர்வமாக விலை போன 6 பொருட்கள்:

செவ்வாய் கிரக கல் 

ஏல தொடக்க விலை 4,50,000 டாலர்கள். விலை போனதும் அதே 4,50,000 டாலர்கள்தான். சூரியனைச் சுற்றிவரும் குறுங்கோள் ஒன்று செவ்வாயில் மோதி அதிலிருந்த சில கற்களைப் பெயர்க்க, இப்படியாக பூமியில் விழுந்த செவ்வாய் கிரக கல் இதுதான். வெளி கிரகங்களிலிருந்து இதுவரை 60ஆயிரம்  விண்கற்கள் பூமியில் விழுந்துள்ளன. ஆனால் அதில் செவ்வாய்  கல்லின் விலைதான் மேலே சொல்லியிருப்பது.

அபூர்வ விலை பொருட்கள்

ஆல்பர்ட் ஐன்ஸ்டைனின் கடிதம்

 ஏல தொடக்க விலை 3 லட்சம் டாலர்கள். விலை போனதும் அதே விலைதான். 1954ல் யூத தத்துவ ஞானி, எரிக் குட்கைண்டிற்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார் ஆல்பர்ட் ஐன்ஸ்டைன். அதில் நன்னெறி கோட்பாடு, மதம் மற்றும் மனித இயற்கை சார்ந்தவற்றில் தன் கருத்தில் மாற்றம் இல்லை என தெரிவித்திருந்தார். இது 60 ஆண்டுகளுக்குப் பிறகு விற்பனைக்கு வந்தது.

‘ஹாலிவுட்’ பெயர்ப் பலகை

 1922ல் ஹாலிவுட் பகுதியை அறிமுகப்படுத்தி, ஒரு ரியல் எஸ்டேட் நிறுவனம் பெரிய எழுத்துக்களில் ஒரு போர்டு வைத்தது. பிறகு இதுவே உலக சினிமா தலைமையகத்தின் லேண்ட்மார்க் ஆனது. 1978ம் ஆண்டுதான் இப்பலகை மாற்றப்பட்டு புதிதாக வைக்கப்பட்டது. இந்த போர்டு 2005ல் விற்பனைக்கு வந்தபோது ஏலத்தில் எடுக்க கடும் போட்டி. ஏலம் போன தொகை 4 லட்சத்து 50 ஆயிரத்து 400 டாலர்களாகும்.

பிரிட்ஜ்வில்லி நகரம் 

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள நகரமே பிரிட்ஜ்வில்லி ஆகும்.  தனியாரிடமிருந்த இதனை இபே மூலம் 2002ம் ஆண்டு   ‘வருங்காலத்தில் சிறந்த பொருளாதார மையமாக மாறி பணத்தைக் கொட்டும்’ என விளம்பரப்படுத்தி, 1.77 மில்லியன் டாலர்களுக்கு விற்று விட்டார். பெயர் சொல்ல விரும்பாத ஒரு தொழிலதிபர் இதை விலைக்கு வாங்கிவிட்டு நேரில் வந்து அதனைப் பார்த்தபோது பல வீடுகள் பாழ்பட்ட நிலையில் இருப்பதை பார்த்து, திரும்பி விற்க முயற்சித்தார்; பயனில்லை.

2006-ல் 1.25 மில்லியன் டாலருக்கு விற்று விட்டார். வாங்கியவருக்கும் ஒரு கட்டத்தில் பிடிக்காமல் போய் அவரும் விற்று விட்டதாகக்  கேள்வி. ஏல நிர்ணயத் தொகை 7 லட்சம் டாலர்கள். விலைபோனது அதைவிட இரண்டு மடங்கு விலைக்கு என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். 

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...