News
Loading...

ஜெயலலிதா உடல் நலம்பெற வேண்டி டாக்டர்கள் நடத்திய ஹோமம்!

ஜெயலலிதா உடல் நலம்பெற வேண்டி டாக்டர்கள் நடத்திய ஹோமம்!

முதல்வர் ஜெயலலிதா உடல் நலம்பெற வேண்டி சென்னை யிலுள்ள ‘உங்களுக்காக சேரிட்டபிள் ட்ரஸ்ட்’ டை நிர்வகிக்கும் டாக்டர் சுனில் தலைமையில், 100 மருத்துவர்கள் இணைந்து ஆறு வகையான ஹோம பூஜைகளை நடத்தி இருக்கின்றனர்.

‘மருத்துவத் துறையில் இருக்கும் நீங்களே ஹோமம், யாகம் என்று ‘நம்பிக்கை’யின்பால் செயல்​படுவதை மற்ற மருத்துவர்கள் எப்படிப் பார்க்கிறார்கள்?’ என டாக்டர் சுனிலிடம் கேட்டால், “மக்களை நோயிலிருந்து காப்பாற்றும் மருத்துவர்கள், தங்களுடைய மருத்துவ அறிவுக்கு அப்பாற்பட்டு முழுமையாக நம்புவது இறைவனைத்தான். தமிழக மக்களைக் காப்பாற்றிக் கொண்டிருக்கும் அம்மாவுக்கு, பன்னாட்டு மருத்துவ வல்லுநர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். சென்னையைச் சேர்ந்த டாக்டர்கள் 100 பேருடன் அம்மாவுக்கான சிறப்பான மருத்துவ யாகம் போலத்தான் இதை நடத்தியுள்ளோம். ஆறுவகை ஹோமம் மிகச் சிறப்பாக நடந்து முடிந்திருக்கிறது” என்கிறார்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...