News
Loading...

சீன பட்டாசு விற்பனை செய்பவர்களை தேச விரோத வழக்கில் கைது செய்ய வேண்டும்

சீன பட்டாசு விற்பனை செய்பவர்களை தேச விரோத வழக்கில் கைது செய்ய வேண்டும்

சீன பட்டாசுகளை விற்பனை செய்யும் வியாபாரிகளை தேச விரோத வழக்கில் கைது செய்ய வேண்டும் என்று முதல்வரின் தனி பிரிவில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு நாடார் சங்கங்களின் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் முத்து ரமேஷ் சென்னை தலைமை செயலகத்தில் செயல்படும் முதல்வரின் தனிப்பிரிவில் நேற்று அளித்த மனுவில் கூறி இருப்பதாவது:இந்தியாவில் சீன பட்டாசுகள் விற்பனை செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சிவகாசி பட்டாசுகளை விட 85 சதவீதம் குறைந்த விலைக்கு சீன பட்டாசுகள் கிடைக்கிறது. இதனால் லாப நோக்கம் கொண்ட வியாபாரிகள் சட்டத்திற்கு புறம்பாக சீன பட்டாசுகளை விற்பனை செய்ய ஆர்வம் காட்டி வருகிறார்கள்.மனித குலத்திற்கு பெரும் தீங்கு விளைவிக்க கூடிய பொட்டாசியம் குளோரைடு, பெர்குளோரைடு, சல்பர் போன்ற ரசாயனம் கலந்த சீன பட்டாசுகளை வெடிப்பதால் சத்தம், புகை அதிகம் வரும். இதனால் மூச்சு திணறல், மயக்கம், ஆஸ்துமா, புற்றுநோய் போன்ற நோய்கள் ஏற்படக்கூடிய வாய்ப்பு உள்ளது.

பட்டாசு தொழில் ஒன்றையே நம்பி விருதுநகர் மாவட்டத்தில் 5 லட்சம் தொழிலாளர்களும், நாடு முழுவதும் பல லட்சம் சில்லறை விற்பனையாளர்களின் குடும்பங்களும் உள்ளன. எனவே, அவர்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் வகையில், சீன பட்டாசுகளை விற்பனை செய்யும் வியாபாரிகளை தேச விரோத வழக்கில் கைது செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...