News
Loading...

வார ராசிபலன் - கும்பம்

வார ராசிபலன் - கும்பம்

14.10.2016 முதல் 20.10.2016 வரை

தீர்க்கமாக செயல்புரிந்து வெற்றிபெறும் கும்ப ராசி அன்பர்களே!

வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். நண்பர்கள் மூலம் கனவுகள் நனவாகும்.

உத்தியோகம்:   உத்தியோகஸ்தர்கள், உயரதிகாரிகளின் ஆதரவோடு சில முக்கிய காரியங்களை வெற்றிகரமாகச் செய்து முடிப்பீர்கள்.

தொழில்:  சொந்தத்தொழில் செய்பவர்கள் வாடிக்கையாளர்களிடம் வெறுப்பைச் சம்பாதித்துக் கொள்ள நேரலாம். தொழிலில் போட்டிகளைச் சமாளிக்க வேண்டி இருக்கலாம். கூட்டுத்தொழிலில் லாபம் ஏற்படும். கூட்டாளியின் ஆலோசனையைப் புறக்கணிக்க நேரலாம். பங்குச்சந்தை வியாபாரத்தில் லாபம் உண்டாகும்.

கலை :  கலைத்துறையினர் பணிகளில் சுறுசுறுப்பாக இருப்பர். புதிய ஒப்பந்தத்தில் சிறு சிக்கலை சமாளிக்கும்படி நேரலாம்.

குடும்பம் :    குடும்பத்தில் நன்மையும், தொல்லையும் கலந்து காணப்படும். தாய்வழி உறவினர்கள் பங்குபிரிப்பது சம்பந்தமான மன வேறுபாடுக்குள்ளாகலாம். பெண்கள் உறவினர்களின் மங்கள நிகழ்ச்சி ஒன்றில் கலந்து மகிழலாம்.

வார வழிபாடு:– வியாழக்கிழமை தட்சிணாமூர்த்திக்கு நெய் தீபம்
ஏற்றிவைத்து வழிபாடு செய்வது நல்ல பலன்களை அளிக்கும்.

அதிர்ஷ்ட எண்கள்:– 3,7,9 
அதிர்ஷ்ட நிறம்:– மஞ்சள்

அதிர்ஷ்டக்கிழமை:– வியாழன்

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...