News
Loading...

மாறட்டும் மருத்துவர் பற்றாக்குறை!

மாறட்டும் மருத்துவர் பற்றாக்குறை!

இந்தியாவில் 1,700 பேருக்கு ஒரு மருத்துவர் மட்டுமே இருக்கிறார். கிராமப்புறங்களில் இந்தப் பற்றாக்குறை விகிதம் இன்னும் அதிகமாக உள்ளது. எனவே, சுகாதார நிலையை மேம்படுத்த இளம் மருத்துவர்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்’ என்று சமீபத்தில் டெல்லியில் நடைபெற்ற  மருத்துவ கல்லூரி பட்டமளிப்பு விழா ஒன்றில் அறிவுறுத்தியிருக்கிறார் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி.

மருத்துவம் படித்து முடித்தவுடனே பெரிய நகரங்களிலோ அல்லது வெளிநாடுகளுக்கோ சென்றுதான் வேலை பார்க்க வேண்டும் என்று பெரும்பாலான மருத்துவக் கல்லூரி மாணவர்கள் விரும்பு கிறார்கள். இதனால் கிராமப்புறங்களில் மருத்துவர்களின் பற்றாக்குறை அதிகமாவதை மனதில் கொண்டு இந்த அறிவுரையை வழங்கியிருக்கிறார் ஜனாதிபதி.

‘‘மேற்கு வங்கத்தில் நான் சிறுவனாக இருந்தபோது காலரா, பெரியம்மை, டி.பி மற்றும் பிளேக் போன்ற நோய்களில் சிக்கி கிராமப்புற மக்கள் உயிரிழப்பதைப் பார்த்திருக்கிறேன். அப்போதெல்லாம் ரயில் நிலையங்கள் மற்றும் தபால் நிலையங்களில் கொசுக்கள் பற்றி கவனமாக இருக்கும்படி விளம்பரம் செய்யப்பட்டிருக்கும். தற்போது புதிய சூழல் ஏற்பட்டுள்ளது. 

புதிய நூற்றாண்டில் நாம் புதுவித பிரச்னைகளை சந்தித்து வருகிறோம். டெங்கு, சிக்குன்குன்யா போன்ற நோய்கள் பரவுகின்றன. இவற்றை மனதில் வைத்து சுகாதார நலனில் உள்ள குறைபாடுகளைப் போக்க நீங்கள் பாடுபட வேண்டும். சர்வ தேச அளவில் ஆயிரம் பேருக்கு ஒரு மருத்து வர் என்ற விகிதத்தில் உள்ளனர். 

ஆனால், இந்தியாவில் 1,700 பேருக்கு ஒரு மருத்துவர் மட்டுமே இருக்கிறார். கிராமங்களில் இந்தப் பற்றாக்குறை விகிதம் இன்னும் அதிகமாக உள்ளது. எனவே, கிராமப்புறங்களில் சுகாதார நிலை மேம்பட இளம் மருத்துவர்கள் ஒத்துழைப்பு அளித்து அரசுக்கு உதவ வேண்டும்.

சவால்களை சந்திக்கும் வகையில் திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். கற்பவர்களாகவும், கண்டுபிடிப்பாளர்களாகவும் இருந்து மருத்துவ தொழிலில் முன்னேற வேண்டும்’’ என்று கூறியிருக்கிறார். மாற்றம் வரட்டும் !

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...