News
Loading...

ரிஷப ராசி நேயர்களுக்கான அக்டோபர் மாத ராசிபலன்

ரிஷப ராசி நேயர்களுக்கான அக்டோபர் மாத ராசிபலன்

1-10-2016 முதல் 31-10-2016 வரை

கணித்தவர் : நவக்கிரக ரத்னஜோதி சந்திரசேகரபாரதி

ரிஷபம்: (கிருத்திகை 2-ஆம் பாதம் முதல், ரோகிணி, மிருகசீரிஷம் 2-ஆம் பாதம் வரை.)

பொது: புதன், குரு, கேது ஆகியோரது சஞ்சாரம் அனுகூலமாக உள்ளது. 3-ஆம் தேதி முதல் புதன் 5-ஆமிடம் மாறினாலும் நலமே உண்டாகும். 13-ஆம் தேதி முதல் சுக்கிரன் 7-ஆமிடம் மாறுவது சிறப்பாகாது. 17-ஆம் தேதி முதல் சூரியன் 6-ஆமிடம் மாறுவது நல்லது. 21-ஆம் தேதி முதல் புதன் 6-ஆமிடம் மாறுவது சிறப்பாகும். செவ்வாய், ராகு ஆகியோருக்கு அர்ச்சனை, ஆராதனைகள் செய்வது அவசியம் ஆகும்.

ஆரோக்கியம், குடும்பம்: அடிவயிறு சம்பந்தமான உபாதைகள் ஏற்படும். விபத்துக்கு ஆட்பட நேரலாம். சிலர் அறுவை சிகிச்சை செய்து கொள்ள வேண்டிய நிலை ஏற்படும். குடும்ப நலம் கவனிப்பின்பேரில் சீராகும். மகப்பேறு அல்லது மக்களால் பாக்கியம் உண்டாகும். நண்பர்கள் ஓரளவு உதவுவார்கள். உடன்பிறந்தவர்களாலும், வாழ்க்கைத்துணைவராலும், பெண்களாலும் சங்கடங்களும் மன அமைதிக் குறைவும் ஏற்படும்.

பொருளாதார நிலை: குரு பலத்தால் பணவரவு அதிகரிக்கும். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புக்களும் கூடிவரும். புதிய துறைகளில் முதலீடு செய்ய வாய்ப்பு உண்டாகும்.

நிலபுலங்கள்: எச்சரிக்கையுடன் ஈடுபடுவது நல்லது. சொத்துக்கள் சம்பந்தமான வழக்கு, வியாஜ்ஜியங்களில் ஈடுபட நேரலாம். சட்ட சிக்கல் ஏதும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளவும்.

தொழில்: உத்தியோகஸ்தர்கள், ஆசிரியர்கள், மருத்துவர்கள், விஞ்ஞானிகள், எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள், கல்வித்துறைகளைச் சேர்ந்தவர்கள், தரகர்கள் ஆகியோருக்கெல்லாம் முன்னேற்றமான சூழ்நிலை நிலவிவரும். இயந்திரப்பணியாளர்களும் இன் ஜினீயர்களும் விழிப்புடன் செயல்படுவது நல்லது. எதிலும் வேகம் கூடாது. பயணம் சார்ந்த இனங்களில் விழிப்புத் தேவை.

மாதர்களுக்கு: சோதனைகள் சூழும். பக்குவமாகச் சமாளிப்பது நல்லது.

மாணவர்களுக்கு: வெற்றி வாய்ப்புக்கள் அதிகரிக்கும். விரும்பிய பாடத்தில் படிக்க வாய்ப்பு உண்டாகும். விளையாட்டு விநோதங்களைத் தவிர்க்கவும்.

சந்திராஷ்டமம்: அக்டோபர் 7, 8, 9.

அதிர்ஷ்ட தேதிகள்: அக்டோபர் 2, 3, 5, 6 (முற்பகல்), 11, 16, 19, 28, 30.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.