News
Loading...

அட்டகாசமான அக்டோபர் மாதம்!

அட்டகாசமான அக்டோபர் மாதம்!

கிரிகோரி நாட்காட்டியின் பத்தாவது மாதம், அக்டோபர். லத்தீன் மொழியில் ‘எட்டு’ என அர்த்தம் தரும் ‘அக்டோ’ என்ற சொல்லிலிருந்து வந்ததே அக்டோபர் மாதமாகும். கிரிகோரியன் நாட்காட்டி பயன்படுத்தும் முன்னர் ஜூலியஸ் சீசரால் உருவாக்கப்பட்ட  ஜூலியன் நாட்காட்டி என்ற ரோமானிய நாட்காட்டியில் ஜூலையும் ஆகஸ்ட்டும் கிடையாது. 

ஒரு ஆண்டில் பத்து மாதங்கள்  மட்டுமே இருந்தன. அந்த வரிசையில் இது எட்டாவது மாதமாக இருந்தது. பின்னர் சீரமைக்கப்பட்ட கிரிகோரியில் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்கள் சேர்க்கப்பட்டு 12 மாதங்களாயின. 

எனவே அக்டோபர் பத்தாவது மாதமானது. இம்மாதம் 31 நாட்களைக் கொண்டது. (போப் பதின்மூன்றாம் கிரிகோரியின் ஆணைப்படி ஜூலியன் நாட்காட்டி  திருத்தி அமைக்கப்பட்டது. இதன் காரணமாகத்தான்  இதற்கு ‘கிரிகோரியன் நாட்காட்டி’ என்னும் பெயர் வந்தது. இந்த நாட்காட்டி 1582ம் ஆண்டு  பிப்ரவரி 24 முதல் நடமுறைக்கு வந்தது.)  

அட்டகாசமான அக்டோபர் மாதம்!

முக்கிய தினங்கள்:

1 சர்வதேச முதியோர் தினம்
1 தேசிய ரத்த தான தினம்
2 காந்தி பிறந்த தினம், அனைத்துலக வன்முறையற்ற நாள்
4 உலக வனவிலங்குகள் தினம்
4 சர்வதேச விண்வெளி தினம்
8 இந்திய விமானப்படை நாள்
9 உலக அஞ்சல் தினம்
10 இந்திய அஞ்சல் தினம்
11  உலக முட்டை தினம்
13 உலக இயற்கை அழிவு குறைப்பு நாள்
14 உலக தர நிர்ணய நாள்
16 உலக உணவு தினம்
17 வறுமை ஒழிப்பு தினம்
24 ஐக்கிய நாடுகள் தினம்
30 உலக சிக்கன நாள்

முக்கிய நிகழ்வுகள்:

1,1837 - இந்தியாவில் அஞ்சல் துறை ஏற்படுத்தப்பட்டது.
1,1953 - ஆந்திர மாநிலம் உதயமானது.
3,1990 - கிழக்கு மற்றும் மேற்கு ஜெர்மனிகள் ஒன்றாக இணைந்தன.
4,1957 - ரஷ்யாவின் ஸ்புட்னிக் செயற்கைக்கோள் முதன்முதலாக விண்ணில் செலுத்தப்பட்டது.
5,1780 - வேலு நாச்சியார் தலைமையில் ஆங்கிலேயர் எதிர்ப்புப் போர் நடைபெற்றது.
5,1886 - தென் ஆப்ரிக்காவில் தங்கம் கண்டுபிடிக்கப்பட்டது.
6,1886-தாமஸ் ஆல்வா எடிசன் உலகின் முதலாவது அசையும் சினிமாப் படத்தைக் காண்பித்தார்.
7,1950 - அன்னை தெரசா தனது தொண்டு நிறுவனத்தைத் தொடங்கினார்.
8,1932 - இந்திய விமானப் படை நிறுவப்பட்டது.
11,1968-அமெரிக்காவின் அப்பல்லோ-7 விண்கலம், 3 வீரர்
களுடன் விண்வெளிக்குச் சென்றது.
13,1792-அமெரிக்காவில் வெள்ளை மாளிகைக்கு (குடியரசுத் தலைவர் வசிப்பிடம்) அடிக்கல் நாட்டப்பட்டது.
13,1946 - இந்தியாவில் இடைக்கால அரசு நேரு தலைமையில் அமைந்தது.
15,1932-ஏர் இந்தியா நிறுவனம் தனது விமான சேவையைத் துவக்கியது.
17,1977-அன்னை தெரசா அமைதிக்கான நோபல் பரிசு பெற்றார்.
19,1943 - காச நோய்க்கு மருந்து கண்டுபிடிக்கப்பட்டது.
22,2008-இந்தியாவின் சந்திரயான் விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டது.
22, 2010 - மத்திய அரசு, யானைகளுக்கு தேசிய பாரம்பரிய விலங்கு என்ற அந்தஸ்தைக் கொடுத்தது.
24,1844-இங்கிலாந்தில் ரோச்டேல் என்பவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து ‘சமத்துவ முன்னோடிகள் கூட்டுறவு சங்கம்’ என்ற கூட்டுறவு அமைப்பை முதன்முதலில் ஏற்படுத்தினார்.
25,1917 - ரஷ்யாவில் அக்டோபர் புரட்சி ஏற்பட்டது.
28,1886-அமெரிக்காவின் நியூயார்க் நகரில் சுதந்திர தேவி சிலை திறந்து வைக்கப்பட்டது.

பிரபலங்களின் பிறந்த தினங்கள்

1,1847 - சுதந்திரப் போராட்ட வீராங்கனை அன்னிபெசன்ட் அம்மையார் 
1,1928 - நடிகர் திலகம் சிவாஜி கணேசன் 
2,1869 - மகாத்மா காந்தி
2,1904 - லால் பகதூர் சாஸ்திரி 
4,1884 - சுதந்திரப் போராட்ட வீரர் சுப்ரமணிய சிவா 
4,1904 - சுதந்திரப் போராட்ட வீரர் திருப்பூர் குமரன் 
5,1823 - வள்ளலார் ராமலிங்க அடிகளார் 
8,1935 - புகழ்பெற்ற இந்தியத் தடகள வீரர் மில்கா சிங்  
11,1902 - சுதந்திரப் போராட்ட வீரர் ஜெயப்பிரகாஷ் நாராயணன்
10,1906 - பிரபல எழுத்தாளர் ஆர்.கே.நாராயண்
12,1911 - தமிழறிஞர் நெ.து.சுந்தரவடிவேலு 
12,1891 - தமிழ்மொழி ஆராய்ச்சியாளர் ச.வையாபுரிப் பிள்ளை 
13,1925-முன்னாள் இங்கிலாந்து பிரதமர் மார்கரெட் தாட்சர் 
14, 1890 - முன்னாள் அமெரிக்க அதிபர் ஐஸன்ஹோவர்
15, 1931 - டாக்டர் அப்துல் கலாம் 
19,1910 - நோபல் பரிசு பெற்ற இந்திய விஞ்ஞானி சந்திரசேகர்
21,1833 - நோபல் பரிசு நிறுவனர், விஞ்ஞானி ஆல்ஃபிரட் நோபல்  
27,1920 - முன்னாள் குடியரசுத் தலைவர் கே.ஆர் நாராயணன் 
28,1955 - மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் 
30,1909 - இந்திய அணுசக்தி விஞ்ஞானி ஹோமி ஜே.பாபா  
31,1875 - சர்தார் வல்லபாய் படேல் 

நினைவு தினங்கள்:

1,1995 - ஆதித்ய பிர்லா, பிர்லா தொழில் குழுமத் தலைவர்
2,1975 - காமராஜர் 
3,1995 - ம.பொ.சிவஞானம், சுதந்திரப் போராட்ட வீரர்
5, 2011 - ஸ்டீவ் ஜாப்ஸ், ஆப்பிள் கணினி நிறுவனர்
8, 1979 - ஜெயப்பிரகாஷ் நாராயணன்
8,1959 - பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், பிரபல தமிழ்ப் பாடலாசிரியர்
10,1974 - டாக்டர் மு.வரதராசனார், தமிழறிஞர்
15,1980 - கே.பி.சுந்தராம்பாள், பிரபல பாடகி
18,1931 - தாமஸ் ஆல்வா 
எடிசன், பிரபல விஞ்ஞானி
19,1974 - தி.ஜ.ரங்கநாதன், எழுத்தாளர்
31,1984 - இந்திரா காந்தி 

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.