News
Loading...

சளிக்கு தடுப்பூசி எப்போது வரும்?

சளிக்கு தடுப்பூசி எப்போது வரும்?

அம்மை, போலியோ போன்றவற்றுக்கெல்லாம் தடுப்பூசி வந்துவிட்டது. சாதாரண சளித் தொல்லைக்கு இன்னும் தடுப்பு மருந்தை இந்த விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்க முடியவில்லை. அதற்கு காரணம் சளித் தொற்றை உருவாக்கும், 'ரைனோ வைரஸ்' ரகங்கள் 100க்கும் மேல் இருப்பதுதான். ஒவ்வொரு சளி வைரசுக்கும் தனித்தனி தடுப்பூசி போடுவது கடுப்பேற்றக்கூடியதாக இருக்கும்; கட்டுபடியும் ஆகாது. 

எனவே, அமெரிக்காவிலுள்ள எமோரி பல்கலைக்கழகத்தை சேர்ந்த மருத்துவர்கள் ஒரு குறுக்கு வழியை முயற்சி செய்துள்ளனர். பரவலாக காணப்படும், 50 வகை ரைனோ வைரஸ்களை போதிய அளவு எடுத்து ஒரு கலவையாக ஆக்கி, அதை எலிகள் மற்றும் மக்காவ் குரங்குகளுக்கு ஊசி மூலம் செலுத்தினர். அந்த கலவை தடுப்பூசி, சளியை அந்த விலங்குகளில் தடுப்பது தெரிய வந்துள்ளது. 

''கடந்த, 50 ஆண்டுகளில் யாருக்கும் இந்த எளிய யோசனை தோன்றாதது ஆச்சரியமாக இருக்கிறது,'' என்கிறார் இந்த சோதனைகளை மேற்கொண்ட ஆய்வுக்குழுவை சேர்ந்த மார்ட்டின் மூர். அடுத்து மனித தன்னார்வலர்களுக்கு இந்த கலவையை தந்து சோதிக்க இருக்கின்றனர் விஞ்ஞானிகள். சோதனை பலனளித்தால், இன்னும் சில ஆண்டுகளில் சளித் தொல்லையிலிருந்து மனித குலம் விடுவிக்கப்படக்கூடும்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...