News
Loading...

மத்திய அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டங்கள்!

மத்திய அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டங்கள்!

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுப்பு தெரிவித்த மத்திய அரசை கண்டித்து, தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. 

மதிமுக சார்பில் கோவை காந்திபுரம் பகுதியில் மத்திய அரசை கண்டித்து ஆர்பாட்டம் நடத்தப்பட்டது. அடுத்தாண்டு கர்நாடகாவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதை கருத்தில் கொண்டு, மத்திய அரசு கர்நாடக அரசிற்கு ஆதரவாக செயல்படுவதாக இதில் கலந்து கொண்டவர்கள் குற்றம்சாட்டினர்.

காவல் துறையின் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மதிமுகவினர் 50-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.

அறந்தாங்கியில் மக்கள் நலக் கூட்டணி சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மதிமுக ஒன்றிய செயலாளர் ராசேந்திரன் தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகளின் நிர்வாகிகள் இதில் கலந்து கொண்டனர். 

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படாததைக் கண்டித்து மக்கள் நலக் கூட்டணி சார்பில் தேனியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தேனி பங்களாமேடு பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...