News
Loading...

திமுகவின் அதிரடி போஸ்டரால் பரபரப்பு!!

திமுகவின் அதிரடி போஸ்டரால் பரபரப்பு!!

''காவிரிக்காக நாங்கள்தான் போராடுகிறோம். அதிமுகவோ கட்சித்தலைவியின் நலனுக்காக போராடுகிறது'' என்று திமுக ஒரு புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் தமிழகத்துக்கு மத்திய அரசு துரோகம் விளைவித்துவிட்டது என்று கூறி இன்று தமிழகம் முழுவதும் விவசாய அமைப்புகள், திமுக, இடது சாரிகள், காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், மக்கள் நலக் கூட்டணி ஆகியவை 48 மணி நேர ரயில் ரோகோ போராட்டத்தை இன்று துவக்கியுள்ளது.

இன்று காலை முக்கியமாக தஞ்சை, திருச்சி, சென்னை, கோவை ஆகிய இடங்களில் பெரிய அளவில் இந்த ரயில் ரோகோ நடந்தது. சென்னையில் திமுக பொருளாளர் ஸ்டாலின், திமுக எம்.எல்.ஏ.,க்கள், விடுதலை சிறுத்தைகள் திருமாவளவன், மக்கள் நலக் கூட்டணி ஒருங்கிணைப்பாளர் வைகோ ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறிது நேரத்தில் விடுவிக்கப்பட்டனர்.

இதைக் குறிப்பிட்டு திமுக ஒரு ஒப்பீடு வெளியிட்டுள்ளது. அதில், ''காவிரிக்காக போராடும் திமுக, கட்சித் தலைவிக்காக யாகம் வளர்க்கும் அதிமுக'' என்று புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.