News
Loading...

அமெரிக்க அதிபர் பதவியை வகிக்க டொனால்ட் ட்ரம்பிற்கு எந்த தகுதியும் இல்லை!

அமெரிக்க அதிபர் பதவியை வகிக்க டொனால்ட் ட்ரம்பிற்கு எந்த தகுதியும் இல்லை!

அமெரிக்க அதிபர் பதவி வகிப்பதற்குத் தேவையான எந்த அடிப்படைத் தகுதியும் டொனால்ட் ட்ரம்பிடம் இல்லை என தற்போதைய அதிபர் ஒபாமா கருத்து தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் அடுத்த மாதம் 8 ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது.  இத்தேர்தலில் ஜனநாயக கட்சியின் சார்பில் ஹிலாரி கிளின்டனும், குடியரசுக் கட்சி சார்பில் பிரபல தொழில் அதிபர் டொனால்ட் ட்ரம்பும் போட்டியிடுகின்றனர். 

ஹிலாரி கிளின்டனை ஆதரித்து வடக்கு கரோலினாவில் அதிபர் ஒபாமா பிரச்சாரம் மேற்கொண்டார். 

அப்போது பேசிய அவர், அமெரிக்க அதிபராகப் பதவி வகிக்க பல்வேறு தகுதிகள் அவசியம் என்றும், டொனால்ட் ட்ரம்பிடம் அதற்கான எந்தத் தகுதியும் இல்லை என்றும் கூறினார். 

டொனால்ட் ட்ரம்புக்கு வாக்களித்தால் அமெரிக்காவின் எதிர்காலம் நம்பிக்கையற்றதாக ஆகிவிடும் என்றும் அவர் கூறினார்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...