News
Loading...

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு களம் இறங்கினார் கவுதம் கம்பீர்!

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு களம் இறங்கினார் கவுதம் கம்பீர்!

இந்தூர், நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த நிலையில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள ஹோல்கர் மைதானத்தில் இன்று  தொடங்கியது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். இதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது. 2 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணியில் சேர்க்கப்பட்ட கவுதம் கம்பீர் இன்றைய போட்டியில் களமிறக்கப்பட்டுள்ளார்.  அதேபோல், புவனேஷ்குமார் நீக்கப்பட்டு உமேஷ் யாதவ் சேர்க்கப்பட்டுள்ளார். 3 போட்டிகள் கொண்ட தொடரை இந்திய அணி ஏற்கனவே 2-0 என்ற கணக்கில் வென்றுள்ளதால் இந்த போட்டியிலும் வெற்றி பெற்று தொடரை ஒயிட் வாஷ் செய்யும் முனைப்பில் இந்தியா உள்ளது. கவுதம் கம்பீர் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு அணியில் விளையாடுவது குறிப்பிடத்தக்கது.

இந்திய அணியில் விளையாடும் வீரர்கள் விபரம் வருமாறு:- முரளி விஜய், கவுதம் கம்பீர், புஜாரா, விராட் கோலி, ரஹானே, ரோகித் சர்மா, அஷ்வின், சகா, ஜடேஜா, முகம்மது சமி, உமேஷ் யாதவ்

நியூசிலாந்து அணியில் விளையாடும் வீரர்கள்: டாம் லாதம், மார்டின் குப்தில், கனெ வில்லியம்சன், ரோஸ் டெய்லர், லூக் ரோஞ்சி, ஜேம்ஸ் நீசம், மிட்செல் சண்டெனர், பிஜே வாட்லிங், ஜீதன் படேல், மாட் ஹென்ரி, ட்ரெண்ட் பவுல்ட்,

கான்பூரில் நடந்த முதலாவது டெஸ்டில் 197 ரன்கள் வித்தியாசத்திலும், கொல்கத்தாவில் நடந்த 2-வது டெஸ்டில் 178 ரன்கள் வித்தியாசத்திலும் வாகை சூடிய இந்திய அணி தொடரையும் 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி விட்டது.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...