News
Loading...

தனுஷ் படத்தில் ஹாலிவுட் நடிகர் அல் பசினோ?

தனுஷ் படத்தில் ஹாலிவுட் நடிகர் அல் பசினோ?

தனுஷ் நடிக்கவிருக்கும் புதுப்படத்துக்கு பிரபல ஹாலிவுட் நடிகரை படக்குழுவினர் அணுகியதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஷங்கரின் 'ஐ' பட இசை வெளியீட்டு விழாவில் கலந்துக் கொண்ட அர்னால்ட், புகைப்படிக்கும் விளம்பரத்தில் நடிக்க ஜேம்ஸ்பாண்ட் என திரையுலகில் எதுவும் நடக்கலாம் என்பதை நிரூபிக்கும் வகையில் தற்போது தனுஷ் படத்துக்கு பிரபல ஹாலிவுட் நடிகர் அல் பசினோவை அணுகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முதன் முறையாக தனுஷுடன் கூட்டணி வைத்துள்ள கார்த்திக் சுப்புராஜ் இயக்கவிருக்கும் படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க அல் பசினோவை அணுகியதாக கூறப்படுகிறது. முன்னதாக இந்த கதாப்பாத்திரத்திற்கு மோர்கன் ஃப்ரீமேனை அணுகியதாகவும், பின்னர் அது அல் பசினோவிடம் சென்றதாகவும் தெரிகிறது. எனினும், அல்பசினோவின் தேதி, சம்பளம் உள்ளிட்டவை குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

எனினும், இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் அமெரிக்காவில் படமாக்கப்படவிருப்பதால் ஹாலிவுட் நடிகரை நடிக்க வைக்க படக்குழு முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...