News
Loading...

சீனப்பட்டாசுகளை கண்டறிவது எப்படி?

சீனப்பட்டாசுகளை கண்டறிவது எப்படி?

தீபாவளி நெருங்கி வரும் நிலையில் இந்திய பட்டாசுக்களுடன் சீனப்பட்டாசுக்களும் சட்டவிரோதமாக விற்பனைக்கு வந்துள்ளன.இந்த சீனப் பட்டாசுகள் சுற்றுச்சூழலை அதிக அளவு மாசுபடுத்தும் என்பது மட்டுமின்றி,இந்திய பட்டாசுத் தயாரிப்பாளர்களின் வர்த்தகத்தையும் அழித்து வருகிறது.எனவே சீனப்பட்டாசுகளை இந்திய பட்டாசுகளிலிருந்து எப்படி வேறுபடுத்திப் பார்ப்பது?கண்டுபிடிப்பது?என்பதை இப்போது பார்க்கலாம்..!

சீனப்பட்டாசுகளில் குறைந்த உற்பத்தி செலவுக்காக பொட்டாசியம் குளோரைடு கலக்கப்படுகிறது.எனவே சீனப்பட்டாசுகளை பயன்படுத்தும் போது அதிக அளவில் புகை எழும்பும்.

சீனப்பட்டாசுகளை கண்டறிவது எப்படி?

இந்திய தயாரிப்பு பட்டாசுகளின் பெயர் மற்றும் விபரங்கள் ஆங்கிலத்தில் இருக்கும்.ஆனால் சீனப்பட்டாசுகளில் மாண்டரின் மொழியில் இந்த விபரங்கள் இருக்கும்.

சீனப்பட்டாசு என்பதால் அந்த நாடு குறித்த முகப்பு படங்கள் பட்டாசுகளில் இடம்பெற்றிருக்கும் என நினைக்க வேண்டாம்.குழந்தைகளை ஈர்ப்பதற்காக டோரா புஜ்ஜி,சோட்டா பீம் ஆகிய கார்ட்டூன் படங்கள் கூட சீனப்பட்டாசுகளில் இடம்பெற்றிருக்கும்.

MADE IN CHINA என்பது மிக நுண்ணிய எழுத்துக்களில் சீனப்பட்டாசுகளில் பொறிக்கப்பட்டிருக்கும்.

சீனப்பட்டாசுகளை கண்டறிவது எப்படி?

இந்திய பட்டாசுகளில் அதிகபட்ச விலையும் (MRP) ,பட்டாசுகளை எப்படி கையாள வேண்டும் என்பது குறித்தும் விபரங்கள் அளிக்கப்பட்டிருக்கும்.சீனப்பட்டாசுகளில் இவற்றை காண இயலாது.

நீங்கள் எப்போதும் வாங்கும் விலையை விட குறைந்தபட்சம் 40 சதவீதம் அளவிற்கு சீனப்பட்டாசுகளின் விலை குறைவாக இருக்கும்.

இந்திய பட்டாசுகளின் முகப்பை விட சீனப்பட்டாசுகளின் முகப்பு மிகவும் வண்ணமயமாக இருக்கும்.மேலும் அவை வெடிக்கும் போது அதிக அளவிலான நிறங்களை வெளிப்படுத்தும்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...