News
Loading...

மணிக்கு 100 கி.மீட்டர் வேகத்தில் செல்லும் எலக்ட்ரிக் பைக்..!

மணிக்கு 100 கி.மீட்டர் வேகத்தில் செல்லும் எலக்ட்ரிக் பைக்..!

மணிக்கு 100 கி.மீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய இந்தியாவின் முதல் எலக்ட்ரிக் பைக் ”Tork T6X” சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதன் விலை 1,24,999 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இதற்கான முன்பதிவும் தற்போது தொடங்கப்பட்டுள்ளது.இப்போதைக்கு புனே,பெங்களூரு மற்றும் டெல்லி நகரங்களில் விற்பனை செய்யப்பட உள்ள இந்த பைக்,பின்னர் மற்ற நகரங்களுக்கும் விரிவுபடுத்தப்பட உள்ளது.ஒரு மாதத்திற்கு 5,000 முதல் 10,000 வரையிலான எண்ணிக்கையில் “ Tork T6X” பைக்கை விற்பனை செய்ய TORK நிறுவனம் முடிவெடுத்துள்ளது.

இந்த பைக்கில் ஒரு முறை முழுவதுமாக சார்ஜ் செய்தால் 100 கி.மீட்டர் வரை பயணிக்க முடியும்.இது மணிக்கு 100 கி.மீட்டர் வேகத்தில் செல்லக் கூடிய திறன் பெற்றது.தண்ணீர் மற்றும் தூசியினால் பாதிப்படையாத லித்தியம்-அயர்ன் பேட்டரி இந்த பைக்கில் பொறுத்தப்பட்டுள்ளது.இந்த பேட்டரியை ஒரு மணி நேரத்தில் 80 சதவீதம் வரை சார்ஜ் செய்ய முடியும்.

80,000 கி.மீட்டரிலிருந்து 1 லட்சம் கி.மீட்டர் வரை இந்த பேட்டரியின் ஆயுட் காலம் இருக்கும்.மேலும் இந்த பைக்கில் ஜிபிஸ் வழிகாட்டி,திருட்டு தடுப்புக் கருவி,ரியர் வீல் மற்றும் ஏபிஎஸ் பிரேக் அமைப்பு ஆகியவை உள்ளன.இதன் எடை 130 கிலோவாகும்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...