News
Loading...

சாம்சங் போன் போல ஐபோன் 7 தீப்பிடித்து ஏரிந்தது

சாம்சங் போன் போல ஐபோன் 7 தீப்பிடித்து ஏரிந்தது

சாம்சங் புதிதாக அறிமுகப்படுத்திய நோட் 7 போன் தீபிடித்து எரிந்தது போல தற்போது ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்துள்ள ஐபோன் 7 போனும் தீப்பிடித்து எரிந்துள்ளது.

ஒவ்வொரு முறையும் ஐபோனின் புதிய மாடல்கள் வெளியாகும் போது மக்கள் அதை வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர். இதன்படி ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்த ஐபோன் 7 போனும் உலகம் முழுவதிலும் நல்ல வரவேற்பை பெற்றது.

சில வாரங்களுக்கு முன் சாம்சங் அறிமுகம் செய்த சாம்சன் நோட் 7 போன்கள் திடீரென தீப்பிடித்து எரிவதாக புகார் எழுந்தது. இதன் காரணத்தால் விற்கப்பட்ட அனைத்து சாம்சன் நோட் 7 போன்களை நிறுவனம் திரும்பப்பெற்றது. அதேபோல தற்போது ஐபோன் 7 மீது புகார் எழுந்துள்ளது.

ஆஸ்திரேலியாவின் கடல்சறுக்கு சாகசம் செய்யும் மேட் ஜோன்ஸ் என்பவர் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு ஐபோன் 7 போன் வாங்கியுள்ளார். எப்போதும் போல கடல்சறுக்கு செய்ய கடலுக்கு தனது ஜீப்-பில் புறப்பட்டு சென்றார். அவரது போனை காரில் வைத்து விட்டு, கடல் சாகசத்தில் ஈடுபட்டுவிட்டு திரும்ப வந்து பார்க்கும் போது, அவரது போன் தானாக எரிந்து கொண்டிருந்ததாகவும், ஜீப் தீ பிடித்து கொண்டிருந்ததாக புகார் அளித்தார்.

நான் ஆப்பிள் நிறுவனத்தின் சார்ஜர் தவிர மற்ற சார்ஜர்களை பயன்படுத்தவில்லை என கூறியுள்ளார். இருப்பினும் போன் தீ பிடித்தது எப்படி என கேள்வி எழுப்பியுள்ளார்.

லித்தியம்-ஐயன் பேட்டரிகள் கொண்ட போன்கள் அதிகளவு சூடாகும் போது தீப்பிடித்து எரிவதாக கூறி சாம்சங் நோட் 7 போனை திரும்ப பெறப்பட்டது. இதே போல குற்றச்சாட்டு ஐபோன் 7 போன் மீது எழுந்துள்ளது. போன்களுக்கு 7 ராசியான நம்பர் இல்லை போல.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...