News
Loading...

அபாய கட்டத்தை தாண்டிவிட்டார் ஜெயலலிதா! மாலினி பார்த்தசாரதி

அபாய கட்டத்தை தாண்டிவிட்டார் ஜெயலலிதா! மாலினி பார்த்தசாரதி

முதல்வர் ஜெயலலிதா அபாய கட்டத்தை தாண்டி விட்டார் என்று முன்னாள் பத்திரிகையாளருமான  மாலினி பார்த்தசாரதி தனது டிவிட்டர் பக்கத்தில் எழுதி உள்ளார்.

முதல்வர் உடல் குறித்து பல்வேறு வதந்திகள் பரவுவதும், அதையடுத்து பொதுமக்கள் பதுங்குவதும், வியாபாரிகள் முழி பிதுங்கி நிற்பதும் வாடிக்கையாகி வருகிறது.

கடந்த 10 நாட்களாக வதந்திங்கள் உலா வரும்… உடனே அப்பல்லோவில் இருந்து ‘முதல்வர் நலம்’  என அறிக்கை வரும். இதுதான் நடந்து வருகிறது.

இந்தநிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு  முன்பு  லண்டனில் இருந்து வந்துள்ள நுரையீல் சிறப்பு மருத்துவர்  ரிச்சட் பீலே வந்து ஜெயலலிதாவை பரிசோதித்து, அவரது உடல் குறித்து அறிக்கை கொடுத்தார். அதில் முதல்வர் உடல்நலம் தேறி வருவதாக தெரிவித்திருந்தார்.

இந்தநிலையில், பிரபல இந்து பத்திரிக்கையின் முன்னாள் மேனேஜிங் எடிட்டரும், பிரபலமான பத்திரிக்கையாளருமான   மாலினி பார்த்தசாரதி முதல்வர்  குறித்த நம்பத்தகுந்த தகவல்களை வெளியிட்டுள்ளார்.

அதில், அப்பல்லோவில் பணிபுரியும் முக்கிய நிர்வாகி, முதல்வர் அபாய கட்டத்தை தாண்டி விட்டார் என தமக்கு தெரிவித்ததாக டிவிட்டரில் பதிவேற்றம் செய்துள்ளார்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...