News
Loading...

ஜெயலலிதா உடல்நிலை பற்றி பேஸ்புக்கில் அவதூறு பரப்பியதாக தி.மு.க. கவுன்சிலர்-20 பேர் மீது வழக்கு

ஜெயலலிதா உடல்நிலை பற்றி பேஸ்புக்கில் அவதூறு பரப்பியதாக தி.மு.க. கவுன்சிலர்-20 பேர் மீது வழக்கு

முதல்-அமைச்சர் ஜெயலலிதா உடல்நிலை பற்றி பேஸ்புக்கில் அவதூறு பரப்பியதாக 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், முதல்-அமைச்சர் உடல் நிலை பற்றி அவதூறு பரப்புபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரித்துள்ளனர்.

இந்தநிலையில் கோவை மாவட்டம், பொள்ளாச்சி நகராட்சி தலைவரும், அ.தி.மு.க. நகர செயலாளருமான கிருஷ்ணகுமார் மகாலிங்கபுரம் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:-

பொள்ளாச்சி நகராட்சி 8-வது வார்டு தி.மு.க. கவுன்சிலரும், மாவட்ட இளைஞரணி செயலாளருமான நவ நீதகிருஷ்ணன் பேஸ்புக்கில், முதல்-அமைச்சர் உடல் நிலை பற்றி அவதூறாக ஒரு கவிதையை பதிவிட்டுள்ளார். அதனை ராஜீவ்காந்தி உள்பட 20 பேர் மற்றவர்களுக்கு பரப்பி வருகிறார்கள். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார்.

புகாரின்பேரில் நவநீத கிருஷ்ணன் உள்பட 20 பேர் மீதும் இந்திய தண்டனை சட்டம் 153(ஏ)-பிரிவினையை தூண்டி பிரச்சினை ஏற்படுத்துதல், 505(2)-பெண்களை இழிவாக பேசி அவதூறு பரப்புதல் ஆகிய பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.