News
Loading...

ஜெயலலிதா மருத்துவமனையிலேயே இருக்க வேண்டும்: அப்பல்லோ அறிக்கை

ஜெயலலிதா மருத்துவமனையிலேயே இருக்க வேண்டும்: அப்பல்லோ அறிக்கை

முதல்வர் ஜெயலலிதா உடல்நிலையில் தற்போது நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாக அப்பல்லோ மருத்துவமனை தற்போது வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மருத்துவமனையில் தீவிர கண்காணிப்பில் இருக்க வேண்டியிருக்கும் என்றும் அப்பல்லோ மருத்துமனை கூறியுள்ளது. கடந்த மாதம் 22ம் தேதி முதல் தொடர்ந்து 16 நாட்களாக ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக நேற்று மாலை அப்பல்லோ மருத்துவமனை ஒரு அறிக்கை வெளியிட்டது. அதில், கூறியிருப்பதாவது: தொடர்ந்து சிகிச்சை பெற்று வரும் முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது. அனைத்து தரப்பு மருத்துவர்கள் அடங்கிய குழுவினர் முதல்வர் உடல்நிலையை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

டெல்லியிலிருந்து வந்த எய்ம்ஸ் டாக்டர்கள் குழு மற்றும் லண்டன் டாக்டர் ரிச்சர்டு ஜான் பீலேவுடன் இணைந்து முதல் அமைச்சர் ஜெயலலிதாவுக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகிறது.

நேற்று முன்தினம் இரவு டெல்லி எய்ம்ஸ் மருத்துவ நிபுணர்கள் டாக்டர் கில்னானி (நுரையீரல் சிகிச்சை நிபுணர்), டாக்டர் அஞ்சான் டிரிக்கா (மயக்கவியல், தீவிர சிகிச்சை நிபுணர்), டாக்டர் நிதீஷ் நாயக் (இதய சிகிச்சை நிபுணர்) ஆகியோர் சென்னை வந்து, லண்டன் டாக்டர் ரிச்சர்டு ஜான் பீலேவுடன் இணைந்து முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை மேற்கொண்டனர்.

இன்றுவரை அப்பல்லோவில் இருக்கும் எய்ம்ஸ் குழு மற்றும் டாக்டர் ரிச்சர்டு ஆகியோர் தலைமையில் ஜெயலலிதாவின் உடல்நிலை பற்றி பரிசோதனை நடந்தது. கிட்டத்தட்ட 45 நிமிடங்களுக்கு மேலாக நடந்த இந்த பரிசோதனையில், ஜெயலலிதாவின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது. அப்படியிருந்தாலும், ஜெயலலிதா தொடர்ந்து மருத்துவமனையிலேயே தங்கவேண்டியிருக்கும் என்று அப்பல்லோ வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...