News
Loading...

மாட்டிறைச்சி பற்றி சர்ச்சை கருத்து பகிர்ந்தவர்: போலீஸ் காவலில் உயிரிழப்பு

மாட்டிறைச்சி பற்றி சர்ச்சை கருத்து பகிர்ந்தவர்: போலீஸ் காவலில் உயிரிழப்பு

மாட்டிறைச்சி குறித்து வாட்ஸ் அப்பில் சர்ச்சை கருத்து பகிர்ந்தவர் போலீஸ் காவலில் உயிரிழந்த சம்பவம் ஜார்க்கண்டில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஜார்க்கண்ட் மாநிலம் ஜம்தாரா பகுதியைச் சேர்ந்தவர் மின்ஹாஸ் அன்சாரி (வயது 22). இவர் வாட்ஸ் அப்பில் மாட்டிறைச்சி தொடர்பாக சர்ச்சைக்குரிய வகையில் கருத்து பரப்பியதாக கூறி, கடந்த வாரம் போலீஸார் கைது செய்தனர். போலீஸ் காவலில் இருந்த மின்ஹாஸ், திடீரென உயிரிழந்தார். மின்ஹாஸ் அன்சாரியை போலீஸார், அடித்து உதைத்து, கொடுமைப்படுத்தி கொன்றதாக அவரது உறவினர்கள் குற்றம்சாட்டுகின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக ஹரிஸ் பாதக் என்ற காவல்துறை அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மூளையில் வீக்கம் ஏற்பட்டதால் அன்சாரி உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.