News
Loading...

தீபாவளி jokes


‘‘அதென்ன ‘சட்டசபை வெடி’..?’’
‘‘இதை வெடிச்சீங்கன்னா, சட்டசபையில மேஜையைத் தட்டற மாதிரி சத்தம் வரும்!’’
- பர்வீன் யூனுஸ், ஈரோடு. 

‘‘தலைவர் மகளிரணித் தலைவி கிட்ட ‘நாளை நமதே’ங்கறாரே... என்ன விஷயம்?’’
‘‘அதுவா... இன்னைக்கு சம்சாரத்தோட தீபாவளி கொண்டாடிட்டு, ‘நாளைக்கு அவங்ககூட கொண்டாடப் போறதைச் சொல்றார்!’’
- பர்வீன் யூனுஸ், ஈரோடு. 

‘‘இந்தப் பட்டாசுல கெட்ட வாடை அடிக்குதே... ஏன்?’’
‘‘ஊசிப் பட்டாசு கேட்டா, கடைக்காரர் ஊசிப் போன பட்டாசைக் கொடுத்திட்டார்..!’’
- பர்வீன் யூனுஸ், ஈரோடு. 

‘அது என்ன புதுசா செல்ஃபி வெடி..?’’
‘‘மூஞ்சிக்கு நேரா எடுத்துக்கிட்டு போனாதான் வெடிக்கும்!’’
- வி.சாரதி டேச்சு, சென்னை-5.

‘‘அது என்ன புதுசா டவர் வெடி..?’’
‘‘செல்போன் டவர் மேல ஏறி கொளுத்தினாதான் வெடிக்கும்!’’
- வி.சாரதிடேச்சு, சென்னை-5.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...