News
Loading...

கேரளாவின் குப்பைத்தொட்டியா தமிழ்நாடு?

கேரளாவின் குப்பைத்தொட்டியா தமிழ்நாடு?

தேனி மாவட்டம் கம்பம் நகராட்சி குப்பைக்கிடங்கில் கேரளாவில் இருந்து மருத்துவக் கழிவுகள் கொட்டப்படுவதால், தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

கம்பம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து சேகரிக்கப்படும் குப்பைகள், நகராட்சி குப்பைக் கிடங்கில் கொட்டப்படுகின்றன. இந்த குப்பைகளுக்கு நகராட்சி நிர்வாகமே அடிக்கடி தீ வைப்பதால் கடும் புகையுடன், துர்நாற்றம் வீசுவதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். 

இந்நிலையில் கேரள மாநிலத்திலிருந்து இரவு நேரங்களில், குப்பைகள் மற்றும் மருத்துவக் கழிவுகள், கம்பம் குப்பைக் கிடங்கில் கொட்டப்படுவதாக சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவிக்கின்றனர். இவற்றை அதிகாரிகள் கண்டு கொள்வதில்லை எனவும், இதனால் சுவாசக் கோளாறு உள்ளிட்ட பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படுவதாகவும் பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். 

இதனை சரிசெய்ய நகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள்  கோரிக்கை விடுத்துள்ளனர்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.