News
Loading...

மேஷ ராசி நேயர்களுக்கான அக்டோபர் மாத ராசிபலன்

மேஷ ராசி நேயர்களுக்கான அக்டோபர் மாத ராசிபலன்

1-10-2016 முதல் 31-10-2016 வரை

கணித்தவர் : நவக்கிரக ரத்னஜோதி சந்திரசேகரபாரதி

மேஷம்: (அசுவினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் முடிய)

பொது: சூரியன், கேது ஆகியோர் அனுகூலமாக உலவுகிறார்கள். 3-ஆம் தேதி முதல் புதன் 6-ஆமிடம் மாறுவது சிறப்பாகும். 13-ஆம் தேதி முதல் சுக்கிரன் 8-ஆமிடம் மாறுவது நல்லது. 17-ஆம் தேதி முதல் சூரியன் 7-ஆமிடம் மாறுவது குறை. 21-ஆம் தேதி முதல் புதன் 7-ஆமிடம் மாறுவதும் சிறப்பாகாது. குரு, சனி ஆகியோருக்குப் பிரீதி, பரிகாரங்கள் செய்து கொள்வது நல்லது.

ஆரோக்கியம், குடும்பம்: வயிறு, முதுகு சம்பந்தமான உபாதைகள் ஏற்படும். குடும்பத்தில் சிறுசிறு பிரச்னைகள் தலைதூக்கும். தந்தையால் அனுகூலம் உண்டாகும். மக்களின் நடத்தையில் கவனம் செலுத்தி வருவது நல்லது. மாதப் பின்பகுதியில் கணவன் மனைவி உறவு நிலை பாதிக்கும். விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. உடன்பிறந்தவர்கள் ஓரளவு உதவி புரிவார்கள்.

பொருளாதார நிலை: ஏற்றம்-இறக்கமாகவே இருக்கும். வீண் செலவுகளைத் தவிர்ப்பது நல்லது. அதிர்ஷ்ட வாய்ப்புக்களை எண்ணி ஏமாற வேண்டாம். யாருக்கும் ஜாமீன் கொடுக்கலாகாது.

நிலபுலங்கள்: ஓரளவு லாபம் தரும். பராமரிப்புச் செலவுகள் சற்று அதிகரிக்கவே செய்யும்.

தொழில்: அரசியல் ஈடுபாடு ஆக்கம் தரும். நிறுவன, நிர்வாகத்துறையினருக்கும், ஆன்மிகப்பணியாளர்களுக்கும் மருத்துவர்களுக்கும் அனுகூலமான போக்கு தென்படும். வியாபாரிகளுக்கு 3 முதல் 20-ஆம் தேதி வரை விசேடமான வளர்ச்சி தெரியவரும். கலைஞர்களுக்குத் திறமை வீண்போகாது. உத்தியோகஸ்தர்களும் தொழிலாளர்களும் அதிகம் பாடுபட வேண்டிவரும்.

மாதர்களுக்கு: சிறுசிறு இடர்ப்பாடுகள் ஏற்படும். கெட்டவர்களிடம் எச்சரிக்கை தேவை. மாதப்பின்பகுதியில் எதிலும் விழிப்புடன் ஈடுபடுவது நல்லது.

மாணவர்களுக்கு: முன்னேற்றமான சூழ்நிலை நிலவிவரும். சோர்வுக்கு இடம் தரலாகாது. 

சந்திராஷ்டமம்: அக்டோபர் 5, 6, 7.

அதிர்ஷ்ட தேதிகள்: அக்டோபர் 2, 3, 11, 16, 19, 28, 30

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.