News
Loading...

திருவண்ணாமலை அருகே மர்ம காய்ச்சல் பாதிப்பால் 15 நாட்களில் 7 பேர் உயிரிழப்பு!

திருவண்ணாமலை அருகே மர்ம காய்ச்சல் பாதிப்பால் 15 நாட்களில் 7 பேர் உயிரிழப்பு!

திருவண்ணாமலை அருகே தண்டரை கிராமத்தில் மர்ம காய்ச்சல் பாதிப்பால் 7 பேர் பலியான உயிரிழந்த சம்பவம் குறித்து மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.  

திருவண்ணாமலை அருகே தண்டரை கிராமத்தில் மர்ம காய்ச்சல் பாதிப்பால், கடந்த 15 நாட்களில் 7 பேர் பலியான சம்பவம், அப்பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. 

இதனையடுத்து அக்கிராமத்தில் சுகாதாரத்துறையினர் நேற்று முதல் சிறப்பு மருத்துவ முகாம் அமைத்து தீவிர கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். 

இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பிரசாந்த், அக்கிராமத்திற்கு நேரில் சென்று பாதிக்கப்பட்ட மக்களிடையே நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விரிவாக எடுத்துரைத்தார்.  

English Summary : mystery fever kills 7 people near thiruvannamalai impact

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...