News
Loading...

ஜெயலலிதாவின் உடல் நிலை குறித்து விசாரிக்க அப்போலோ போன பவர் ஸ்டார் டாக்டர் சீனிவாசன்


சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நிலை குறித்து விசாரிக்க இன்று நடிகர் பவர் ஸ்டார் டாக்டர் சீனிவாசன் மருத்துவமனைக்கு சென்றார்.

கடந்த 18 நாட்களாக தமிழக முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தொடக்கத்தில் காய்ச்சல் மற்றும் நீர்சத்து குறைபாடு காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவருக்கு தற்போது நுரையீரல் தொற்றுக்கான மருத்துவமும் செய்யப்பட்டு வருகிறது. தொடர்ந்து லண்டன் மற்றும் எய்ம்ஸ் மருத்துவர்களும் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இந்நிலையில், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் ஜெயலலிதாவின் உடல் நலம் குறித்து மருத்துவ குழுவிடம் விசாரித்துவிட்டு செல்கின்றனர். அந்த வகையில் இன்று புதுச்சேரி மாநில துணை நிலை கவர்னர் கிரண்பேடி, கேரள கவர்னர் சதாசிவம், முதல்வர் விஜயன் பினராயி ஆகிய அண்டை மாநில தலைவர்களும் சென்னை அப்போலோ மருத்துவமனைக்கு வந்து ஜெயலலிதாவின் உடல் நலம் குறித்து விசாரித்து சென்றனர்.

இதனையடுத்து, தமிழகத்தைச் சேர்ந்த காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான தங்கபாலு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் டி.கே. ரங்கராஜன் மற்றும் நடிகர் பவர் ஸ்டார் டாக்டர் சீனிவாசன் ஆகியோரும் அப்போலோவிற்கு சென்று ஜெயலலிதாவின் உடல் நிலை குறித்து விசாரித்தனர்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...