News
Loading...

​ SRM நைட்டிங்கேல் பள்ளி சிறுமி உயிரிழந்த விவகாரம் : உறவினர்கள் பரபரப்பு குற்றச்சாட்டு!

​ SRM நைட்டிங்கேல் பள்ளி சிறுமி உயிரிழந்த விவகாரம் : உறவினர்கள் பரபரப்பு குற்றச்சாட்டு!

சென்னை SRM நைட்டிங்கேல் பள்ளியில் உயிரிழந்த சிறுமி, பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளதாக அவரது தாத்தா குற்றம் சாட்டியுள்ளார்.

சிறுமி லோக மித்ரா மர்மமான முறையில் இறந்த சம்பவத்தில், SRM பள்ளி நிர்வாகம் உண்மைகளை மூடி மறைப்பதாக உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். பள்ளியின் 4-வது மாடிக்கு சிறுமி லோகமித்ரா செல்வதற்கு வாய்ப்பு இல்லாத நிலையில், அவள் எதற்காக அங்கு சென்றாள் என்பதை சொல்ல பள்ளி ஆசிரியர்கள் மறுப்பதாக தாத்தா ராஜேந்திரன் கூறியுள்ளார்.

மேலும் உண்மைகளை மறைப்பதன் வாயிலாக யாரையோ காப்பாற்றுவதற்கு SRM பள்ளி நிர்வாகம் முயல்வதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். எனவே உண்மைகளை வெளியிடாவிட்டால், சம்மந்தப்பட்ட பள்ளி முன்போ அல்லது சிம்ஸ் மருத்துவமனை முன்பாகவோ தீக்குளிக்க போவதாகவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...