News
Loading...

முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு படுக்கை புண்ணா?

முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு படுக்கை புண்ணா?

கடந்த 28 நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு படுக்கை புண் ஏற்பட்டு இருப்பதாகவும், அதற்காக சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உடல் நலம் பாதிக்கப்பட்டு கடந்த செப்டம்பர் 22ஆம் தேதி இரவு சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்ட்டார். தொடர்ந்து செயற்கை சுவாசத்துடன், ட்ரகியோடோமி சிகிச்சை அளிக்கப்பட்டு கிரிடிகல் கேர் பிரிவில் முதலமைச்சருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. முதலமைச்சருக்கு நுரையீரல் தொற்று, ரத்தத்தில் கிருமி தொற்று என்று உறுதிபடுத்தப்படாத தகவல்கள் வெளியாகின. இவருக்கு மூன்று முறை எய்ம்ஸ் மருத்துவக் குழுவும், லண்டன் டாக்டர் ரிச்சர்டு ஜான் பீலேவும் சிகிச்சை அளித்தனர். முதலமைச்சரின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏறபட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கிடையே அவருக்கு சிங்கப்பூரில் இருந்து வந்த மருத்துவர்கள் பிசியோதெரபி அளித்து வருகின்றனர். 

தொடர்ந்து கடந்த 28 நாட்களாக படுக்கையில் இருந்தபடி சிகிச்சை பெற்று வருவதால் ஜெயலலிதாவிற்கு படுக்கை புண் ஏற்பட்டு இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. அவருக்கு படுக்கைப் புண் ஏற்படாமல் இருக்க தண்ணீர் பெட், பவுடர் மசாஜ் அளித்து அடிக்கடி படுக்கை மாற்றி படுக்க வைப்பதாகவும், தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் செய்தி வெளியாகியுள்ளது. அதிநவீன ஸ்ப்ரே செய்யும் மருந்துகள் மூலம் படுக்கைப் புண்களை குணப்படுத்த டாக்டர்கள் முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது.

கடந்த 10 நாட்களுக்கும் மேலாக முதல்வரின் உடல் நலம் குறித்து மருத்துவமனையும் எந்த தகவலையும் வெளியிடவில்லை. தினமும் கட்சியினர் மருத்துவமனை முன்பு கூடி, முதலமைச்சர் குணமடைய பிரார்த்தனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...