News
Loading...

ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் நாளை தமிழக அமைச்சரவைக் கூட்டம் கூடுகிறது..!

ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் நாளை தமிழக அமைச்சரவைக் கூட்டம் கூடுகிறது..!

நிதி அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் நாளை காலை தமிழக அமைச்சரவைக் கூட்டம் கூட உள்ளது.

உடல்நலக்குறைவு காரணமாக தமிழக முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால்,அவர் வசம் உள்ள துறைகளின் பொறுப்புகளை நிதி அமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்திடம் தமிழக ஆளுநர் சமீபத்தில் ஒப்படைத்தார்.மேலும் தமிழக அமைச்சரவைக் கூட்டங்களுக்கும் ஓ.பன்னீர் செல்வம் தலைமை வகிப்பார் எனவும் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று உச்சநீதிமன்றத்திற்கு விசாரணைக்கு வந்த காவிரி நதிநீர் பங்கீடு குறித்த வழக்கில்,மறு உத்தரவு வரும் வரை தினமும் 2,000 கன அடி நீரை தமிழகத்திற்கு கர்நாடகா திறந்துவிட வேண்டும் என உத்தரவிடப்பட்டது.

இதனை தொடர்ந்து தமிழக அமைச்சரவைக் கூட்டம் நாளை காலை 9.30 மணி அளவில்,தலைமைச் செயலகத்தில் நடைபெறும் எனவும் இந்த கூட்டத்திற்கு ஓ.பன்னீர் செல்வம் தலைமை வகிப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த கூட்டத்தில் காவிரி நதிநீர் பிரச்சனை குறித்தும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிகாரிகளை நியமிப்பது குறித்தும் விவாதிக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.