News
Loading...

விழுப்புரம்: பா.ஜ.க. பிரமுகர் ரவுடி ஜனா வெட்டிக்கொலை!

விழுப்புரம்: பா.ஜ.க. பிரமுகர் ரவுடி ஜனா வெட்டிக்கொலை!

விழுப்புரத்தில் பாஜகவை சேர்ந்த பிரபல ரவுடி இன்று மர்ம நபர்களால் நடுரோட்டில் வெட்டிக்கொல்லப்பட்டார்.

விழுப்புரம் மாவட்ட பாஜக இளைஞர் அணி செயளாலராக பொறுப்பு வகித்தவர் ஜனா என்கிற ஜனார்த்தனன். இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. பிரபல ரவுடியாக வலம் வந்தார். இன்னொரு பிரபல ரவுடியான குயிலாப்பாளையம் மணிகண்டனுடன் சேந்து சட்டத்துக்குப் புறம்பான பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்ததாக சொல்லப்படுகிறது.

முன்பு விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்த ஜனா, பிறகு பா.ஜ.க.வுக்கு வந்தார். இங்கு அவருக்கு இளைஞர் அணி செயலாளர் பொறுப்பு கொடுக்கப்பட்டது.

இன்று ஜனா, தன் மீதான வழக்கு ஒன்றுக்காக நீதிமன்றத்தில் ஆஜராகிவிட்டு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது அவரை மர்ம கும்பல் ஒன்று வழிமறித்தது. சூழலை புரிந்துகெணாட ஜனா, பைக்கை போட்டுவிட்டு ஓடத்துவங்கினார். அவரை விரட்டிச்சென்ற கும்பல், சரமாரியாக வெட்டி கூறுபோட்டது. இதையடுத்து சம்பவ இடத்திலேயே ஜனா பலியானார்.

ஜனாவுக்கு எதிரான ரவுடிக்கும்பல்களில் ஏதாவது ஒன்று இந்த கொலையில் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்று முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

நடு ரோட்டில் நடந்த இந்த கொடூர கொலை , விழுப்புரம் பகுதி மக்களை பெரிதும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...