News
Loading...

தமிழகம் 18வது இடத்திற்கு தள்ளப்பட்டது ஏன்?

தமிழகம் 18வது இடத்திற்கு தள்ளப்பட்டது ஏன்?

தொழில் துவங்க உகந்த மாநிலங்கள் பட்டிய லில், தமிழகம் மிக மோசமான சரிவை சந்தித் ததற்கு, அனைத்து அனுமதியையும் ஒரே இடத்தில் வழங்காதது; அனுமதி வழங்க குறித்த காலக்கெடு நிர்ணயிக்காதது மற்றும் வரி விதிப்பு குளறுபடிகளே காரணம் என, தெரிய வந்துள்ளது.

தொழில் முதலீட்டுக்கு உகந்த நாடுகளை வரிசைப்படுத்தி, உலக வங்கி ஆண்டுதோறும் வெளியிடும் பட்டியலில், இந்தியா, 130வது இடத்திற்கு தள்ளப்பட்டது.

அதிலிருந்து முன்னேறும் நோக்கில்,அனைத்து மாநிலங் களுக்கும், அது போன்ற தரவரிசை பட்டியலை, 2015 முதல், மத்திய அரசும், உலக வங்கியும் இணைந்து வெளியிட்டு வருகின்றன. 

அதன்படி,இந்தாண்டுக்கான, தொழிலுக்கு உகந்த மாநிலங்கள் பட்டியல், கடந்த திங்க ளன்று வெளியிடப்பட்டது. அதில், 2015ஐ விட, ஆறு இடங்கள் சறுக்கி, தமிழகம், 18வது இடத்திற்கு தள்ளப்பட்டு உள்ளது. 

அதற்கான காரணங்களாக கூறப்படுவதாவது:

*வாட், விற்பனை வரி, நுழைவு வரி உள்ளிட்ட அனைத்து விதமான வரிகளுக்கும், தமிழகத் தில், ஒரே அடையாள எண் தரப்படுவதில்லை* 24 மணி நேரத்தில், பதிவுச்சான்று வழங்குவ தில்லை; பத்திரப்பதிவு அலுவலகத்திலேயே, வங்கிக்கு செல்லும் அவசியமின்றி, 'இ - ஸ்டாம்ப்' பெற முடிவதில்லை * குறித்த காலத்திற்குள், அனைத்து அனுமதி களையும் வழங்க காலக்கெடு நிர்ணயிக்கப்பட வில்லை; அனைத்து அனுமதிகளும், ஒரே இடத்தில் வழங்கப்படுவதும் இல்லை * கட்டட அனுமதிக்கான மனுக்களின் நிலையை, இணையதளத்தில் பார்க்க முடிவதில்லை. மாநிலத் திற்கான பொதுவான கட்டட விதிகள் வகுக்கப்பட வில்லை. நகராட்சி அளவில் நில ஆவணங்கள், கணினி மயமாக்கப்படவில்லை * அனைத்து நகர பகுதிகளுக்கும், 'மாஸ்டர் பிளான்' உருவாக்காதது உட்பட, 125 அம்சங்களை, தமிழகம் நிறைவேற்றாமல் உள்ளதாக, மத்திய அரசு தெரிவித்து உள்ளது.

இதுவே, தமிழகம், 18வது இடத்திற்கு தள்ளப்பட்ட தற்கு காரணம். அதே நேரத்தில், சில சாதகமான அம்சங்களும் உள்ளன. அவற்றின் விபரம் வருமாறு: * தமிழகத்தில், தொழில் துவங்குவதற்கான தகவல் களை, இணையதளம் மூலமாக, முதலீட்டாளர்கள் பெறும் வசதி உள்ளது * தொழில் வரி ஆவணங்களை ஒரே நாளில் பெற முடியும்; தகவல்களை பெற பொது தொலைபேசி வசதி உள்ளது * ஒரு அலுவலகத்தை அணுகினாலே, தொழில் துவங்குவதற்கான அனைத்து விபரங்களையும் பெறும் வசதிஎன்பவை உட்பட, 211 அம்சங்கள் உள்ளன. இவற்றை மத்திய அரசு பாராட்டியும் உள்ளது. 

என்ன செய்யலாம்? :

பல மாநிலங்களில், தொழில் துவங்க ஒரு விண்ணப்பம் போதும். தமிழகத்தில், அப்படி யில்லை; ஒவ்வொரு அனுமதிக்கும், பல மாதங்கள் காத்திருக்க வேண்டியுள்ளது. சில மாநிலங்களில், குறிப்பிட்ட நாட்களுக்குள் மனு மீது நடவடிக்கை எடுக்காவிட்டால், அதற்கு தானாகவே அனுமதி கிடைக்கும் வகையில், கடும் நெறிமுறை உள்ளது. 

அது போன்ற நிலைமை, தமிழகத்திலும் உருவாக வேண்டும். தமிழக அரசு, தொழில் துறையினரை அழைத்து பேசுவது இல்லை. மத்திய அரசு சுட்டிக்காட்டி உள்ள குறைபாடு களை தீர்த்து, தொழில் துறையினரின் நம்பிக்கையை பெறும் வகையில், தமிழக அரசு செயல்படுவது அவசியம்.

340க்கு 211 'ஓகே!' :

தொழில் துவங்க உகந்த மாநிலங்களுக்கான, 340 பரிந்துரைகளில், 211 பரிந்துரைகளை, தமிழக அரசு நிறைவேற்றி உள்ளது; 125 பரிந்துரைகளை முழுமையாக நிறைவேற்ற வில்லை. நான்கு அம்சங்கள், தமிழகத்திற்கு பொருந்தாது. 

நுாற்றுக்கு, 62.80மதிப்பெண்கள், தமிழகத்திற்கு கிடைத்துள்ளது. முதலிடம் பெற்ற, ஆந்திரா, தெலுங்கானாமாநிலங்கள், 98.78; 2ம் இடம் பெற்ற குஜராத், 88.21; கடைசி இடம் பிடித்த லட்சத் தீவுகள், 0.3 மதிப்பெண்ணையும் பெற்றுள்ளன.முதலிடம் பிடித்த மாநிலங் கள்,325 பரிந்துரைகளை நிறைவேற்றி உள்ளன. 

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

News2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே! செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.