News
Loading...

புதிய ரூ.2000 நோட்டுகளில் ட்ராக்கிங் எலக்ட்ரானிக் சிப் ஏதுமில்லை: ரிசர்வ் வங்கி

புதிய ரூ.2000 நோட்டுகளில் ட்ராக்கிங் எலக்ட்ரானிக் சிப் ஏதுமில்லை: ரிசர்வ் வங்கி

புதிய ரூ.2000 நோட்டுகளில் எலக்ட்ரானிக் சிப் ஏதும் பதிக்கப்படவில்லை என ரிசர்வ் வங்கி விளக்கமளித்துள்ளது.

"நாடு முழுவதும் 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது. இந்த உத்தரவு நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது. பொதுமக்கள் தங்களிடம் உள்ள 500, 1000 ரூபாய் நோட்டுகளை வரும் 10-ம் தேதி முதல் டிசம்பர் 30-ம் தேதி வரை வங்கிகள் மற்றும் அஞ்சல் நிலையங்களில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம்" என்று பிரதமர் மோடி செவ்வாய்க்கிழமை இரவு அதிரடி அறிவிப்பை வெளியிட்டார்.

இந்நிலையில் புதிதாக வெளியிடப்படவுள்ள ரூ.2000 நோட்டுகளில் எலக்ட்ரானிக் சிப் பொருத்தப்பட்டிருப்பதாக ஃபேஸ்புக், வாட்ஸ் அப் போன்ற சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியானது. இந்நிலையில் இது தொடர்பாக ரிசர்வ் வங்கி இன்று (புதன்கிழமை) வெளியிட்டுள்ள அறிவிப்பில், "சமூக வலைத்தளங்களில் குறிப்பிடப்படுவதுபோல் புதிய ரூ.2000 நோட்டுகளில் டிராக்கிங் எலக்ட்ரானிக் சிப் ஏதும் பொருத்தப்படவில்லை.

புதிய ரூ.2000 நோட்டில் இடம்பெற்றுள்ள பாதுகாப்பு அம்சங்கள் குறித்து ரிசர்வ் வங்கியின் ட்விட்டர் பக்கத்தில் தெளிவாகக் குறிப்பிட்டப்பட்டிருக்கிறது. ஏற்கெனவே அதில் குறிப்பிடப்பட்டதுபோல் புதிய நோட்டுகளில் உள்ளுறைந்த படங்கள், வண்ண பாதுகாப்பு இழைகள், வாட்டர்மார்க் போன்ற நுணுக்கங்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளன" எனத் தெரிவித்துள்ளது.

ரூ.2000 நோட்டு சில அடையாளங்கள்:

ரிசர்வ் வங்கியின் ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டிருக்கும் புதிய ரூ.2000 நோட்டில் மொத்தம் 17 பாதுகாப்பு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. அவற்றை பாகம் குறித்து ரிசர்வ் வங்கியே விளக்கியுள்ளது. ரூ.2000 நோட்டின் பின்புறம் மங்கள்யான் விண்களத்தின் படம் இடம்பெற்றிருக்கிறது.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...