News
Loading...

சவுந்தர்யா - தனுஷ் இணையும் 'வேலையில்லா பட்டதாரி 2'

சவுந்தர்யா - தனுஷ் இணையும் 'வேலையில்லா பட்டதாரி 2'

சவுந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் தனுஷ் நடிக்க 'வேலையில்லா பட்டதாரி 2' படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் மாதம் முதல் துவங்கவிருக்கிறது.

தனுஷ் இயக்கத்தில் ராஜ்கிரண் நடிக்கும் 'பவர் பாண்டி' படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. தனுஷ் தயாரித்து வரும் இப்படத்துக்கு ஷான் ரோல்டன் இசையமைத்து வருகிறார். அதனைத் தொடர்ந்து கெளதம் மேனன் இயக்கத்தில் 'என்னை நோக்கி பாயும் தோட்டா' படத்தில் நடித்து வருகிறார் தனுஷ். இவ்விரண்டு படங்களின் இறுதிகட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

இப்படத்தைத் தொடர்ந்து செளந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படத்தின் முதற்கட்ட பணிகள் தொடங்கப்பட்டன. இதற்கான படப்பிடிப்பு இடங்களைத் தேர்வு செய்யும் பணிகளை படக்குழு மேற்கொண்டு வந்தது.

புதன்கிழமை (நவம்பர் 9) ஒரு மாஸ் அறிவிப்பை வெளியிட இருப்பதாக தனுஷ் தனது ட்விட்டர் தளத்தில் தெரிவித்திருந்தார். இன்று காலை தனுஷ் வெளியிட்டுள்ள அறிவிப்பு 'வேலையில்லா பட்டதாரி 2' ஆக அமைந்திருக்கிறது.

இப்படத்துக்கு கதை, வசனத்தை தனுஷ் எழுதியிருக்கிறார். திரைக்கதை எழுதி இயக்கவிருக்கிறார் சவுந்தர்யா ரஜினிகாந்த். அனிருத் மற்றும் ஷான் ரோல்டன் இருவருமே இசையமைக்க இருக்கிறார்கள். தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளிலும் இப்படம் உருவாகவிருக்கிறது. தனுஷின் வுண்டர்பார் நிறுவனம் மற்றும் தாணு இருவரும் இணைந்து தயாரிக்கவிருக்கிறார்கள்.

சவுந்தர்யா இயக்கத்தில் தனுஷ் நடிக்கவிருந்த 'நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்' படத்தின் பணிகள் என்னவானது என்பதை படக்குழு அறிவிக்கவில்லை.

தனுஷ் வெளியிட்டுள்ள வீடியோ பதிவு:


முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...