News
Loading...

பணம் செல்லாது என்ற அறிவிப்பால் இதுவரை 33 பேர் பலி

பணம் செல்லாது என்ற அறிவிப்பால் இதுவரை 33 பேர் பலி

பிரதமர் நரேந்திர மோடி கடந்த 8–ந் தேதி இரவு ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தார். இதனால் நாடு முழுவதும் மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர். இந்த பிரச்சினை இன்னும் 3 வாரங்களில் சீரடையும் என மோடி கூறியுள்ளார். எனினும் மக்கள் இயல்பு நிலைக்கு திரும்ப 4 மாதங்கள் ஆகும் என பொருளாதார வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த அறிவிப்பு வெளியான 6 நாட்களில் மட்டும் பண தட்டுப்பாடு, மன உளைச்சல், வங்கி மற்றும் ஏ.டி.எம்.களில் கூட்ட நெரிசல் போன்றவற்றால் நாடு முழுவதும் 25 பேர் பலியாகி இருப்பது நேற்று தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில்  செல்லாத நோட்டுகளை மாற்ற வங்கிக்கு சென்ற மேலும் 5 பேர் உயிரிழந்தனர்.

உத்தர பிரதேச மாநிலத்தை சேர்ந்த சுரேஷ் சோனார் வயது (40) என்பவரும்.மும்பையில் உள்ள வங்கியில் பணம் மாற்றுவதற்காக வரிசையில் காத்திருந்த 70 வயது முதியவர் ஒருவரும்,  ஜார்கண்ட் மாநிலம் பலாமு மாவட்டத்தில் ராமச்சந்திர பஸ்வான் (70) என்பவரும்,  ஆந்திர மாநிலம் கிருஷ்ணா, சித்தூர் மாவட்டத்தில் பணத்தை மாற்றுவதற்காக நீண்ட வரிசையில் நின்ற விஜயலட்சுமி (72), ரத்னா (70) ஆகியோர் மாரடைப்பால் இறந்தார் என்பது தெரியவந்துள்ளது.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்