News
Loading...

ரூ.4 ஆயிரம் புதிய கரன்சி மாற்றிக் கொடுத்தால், ரூ.500 கமிஷன் தரும் பணக்காரர்கள்

ரூ.4 ஆயிரம் புதிய கரன்சி மாற்றிக் கொடுத்தால், ரூ.500 கமிஷன் தரும் பணக்காரர்கள்

பெரும் பணக்காரர்களிடம் ரூ.500 கமிஷன் வாங்கிக்கொண்டு, அவர் களுக்காக மகளிர் சுயஉதவிக்குழு பெண்கள் பல மணி நேரம் வரிசையில் நின்று பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றி வருவது தெரியவந்துள்ளது.

காலாவதியான ரூ.500, ரூ.1000 நோட்டுகளை மாற்ற வங்கிகளில் கூட்டம் அலைமோதுகிறது. 2 நாட்கள் விடுமுறைக்குப் பிறகு, 11-ம் தேதிமுதல் ஏடிஎம்கள் வழக்கம்போல இயங்கும் என்றும் மத்திய அரசு அறிவித்தது. ஆனால், சென்னையில் பல இடங்களில் நேற்றும் ஏடிஎம்கள் செயல்பட வில்லை. அவை இழுத்து மூடப்பட்டிருந்தன. ஒரு சில ஏடிஎம்கள் திறந்திருந்தாலும், அவற்றில் புதிய கரன்சி நோட்டுகள் நிரப்பப்படவில்லை. ஒருசில முன்னணி வங்கிகளின் ஏடிஎம்களில் அந்த வங்கி வாடிக்கையாளர்களின் ஏடிஎம் கார்டுகள் மட்டுமே ஏற்கப்பட்டு பணம் வந்தது. பிற வங்கி வாடிக் கையாளர்களின் கார்டுகளுக்கு பணம் கிடைக்கவில்லை.

அதிகபட்சம் ஒருநாளுக்கு ரூ.4 ஆயிரம் வரை பணம் எடுக்கலாம் என்று அறிவிக்கப்பட்டாலும், அதிகபட்சம் ரூ.2 ஆயிரம் வரை மட்டுமே எடுக்க முடிந்தது. இத னால் அவசர தேவை உள்ளவர்கள், எந்த ஏடிஎம் இயங்குகிறது என்று தேடி அலைந்தனர். பல ஏடிஎம்கள் மூடியே இருந்ததால், வங்கிகளில் கூட்டம் அலைமோதியது.

ரூ.500 கமிஷன்

கூட்டத்தை போலீஸார் வரிசை யில் நிற்கவைத்து ஒழுங்குபடுத்தி அனுப்பினர். பல வங்கிகளில் மகளிர் சுயஉதவிக் குழுவினரின் கூட்டம் அலைமோதியது. அவர் கள் தலைக்கு ரூ.4 ஆயிரம் வீதம் புதிய கரன்சி நோட்டுகளைப் பெற்றுச் சென்றனர். ரூ.4 ஆயிரம் புதிய கரன்சி மாற்றிக் கொடுத்தால், ரூ.500 கமிஷன் தருவதாக பணக்காரர்கள் சிலர் அவர்களிடம் கூறியிருப்பதாகவும், இதற்காக கால்கடுக்க நின்று புதிய நோட்டுகளை மாற்றிக் கொடுப்பதாகவும் தெரிவித்தனர். தமிழகம் முழுவதும் மகளிர் சுயஉதவிக்குழு பெண்கள் மூலம் அதிக அளவிலான தொகை புதிய நோட்டுகளாக மாறிவருவதாக சந்தேகம் எழுந்துள்ளது.

வாக்காளருக்கு தங்கம்?

தமிழகத்தில் தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் தொகுதிகளில் 19-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடக்க உள்ளது. வேட்பாளர்கள் பணப் பட்டுவாடாவைத் தொடங்கும் நேரத்தில், பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் காலாவதியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், கையில் செல்லாத நோட்டுகளை வைத்துக்கொண்டு வேட்பாளர்கள் செய்வதறியாது தவிக்கின்றனர். இந்நிலையில், வாக்காளர்களுக்கு பணத்துக்கு பதிலாக, தங்கத்தை அன்பளிப் பாக வழங்க அவர்கள் திட்டமிட்டிருப்பதாகத் தெரிகிறது. இதனால் தங்கத்துக்கும் கிராக்கி ஏற்படக்கூடும் என்கின்றனர் நகை வியாபாரிகள்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...