News
Loading...

48 நாட்களுக்குப் பிறகு தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து தனி வார்டுக்கு மாற்றப்பட்டார் ஜெ.

48 நாட்களுக்குப் பிறகு தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து தனி வார்டுக்கு மாற்றப்பட்டார் ஜெ.

முதல்வர் ஜெயலலிதா தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்து 48 நாட்களுக்குப் பிறகு தனி வார்டுக்கு (விஐபி வார்டு) நேற்று மாற்றப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

திடீர் உடல்நலக் குறைவு காரண மாக முதல்வர் ஜெயலலிதா கடந்த செப்டம்பர் 22-ம் தேதி சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக் கப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் குழுவினர் சிகிச்சை அளித்து வந்தனர். இதைத் தொடர்ந்து மருத் துவமனை நிர்வாகம் அழைப்பு விடுத்ததின் பேரில் லண்டன் டாக்டர் ரிச்சர்ட் பீலே சென்னை வந்து முதல்வருக்கு சிகிச்சை அளித்தார். டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் நுரையீரல் சிகிச்சை நிபுணர் ஜி.கில்நானி, மயக்க மருத்துவ நிபுணர் அஞ்சன் ட்ரிக்கா, இதய சிகிச்சை நிபுணர் நிதிஷ் நாயக் ஆகியோரும் சென்னை வந்து முதல்வருக்கு சிகிச்சை அளித்தனர். லண்டன் டாக்டர் 5 முறையும், எய்ம்ஸ் டாக்டர்கள் குழுவினர் 2 முறையும் சென்னை வந்து முதல்வரின் உடல்நிலையை பரிசோதித்து சிகிச்சை அளித்துள்ளனர். முதல் வருக்கு அளிக்கப்பட வேண்டிய சிகிச்சைகள் குறித்த ஆலோ சனைகளையும் அப்போலோ மருத்துவமனை டாக்டர்களுக்கு வழங்கினர்.

மூத்த டாக்டர்கள் சிகிச்சை

அதன்படி, அப்போலோ மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவு குழுவினர், இதய சிகிச்சை, சுவாச சிகிச்சை, தொற்று நோய் சிகிச்சைக்கான மூத்த நிபுணர்கள், நாளமில்லா சுரப்பி மற்றும் சர்க்கரை நோய் நிபுணர்கள் இணைந்து முதல்வருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். இதற்கிடையே, சிங்கப்பூர் மவுன்ட் எலிசபெத் மருத்துவமனையில் இருந்து வந்த மேரி, சீமா ஆகிய 2 பெண் பிசியோதெரபி நிபுணர்கள், முதல்வருக்கு பிசியோதெரபி சிகிச்சை அளித்தனர். 2 வாரத்துக்குப் பிறகு மேரி மட்டும் சிங்கப்பூர் புறப்பட்டுச் சென்றார். சீமா தொடர்ந்து முதல்வருக்கு சிகிச்சை அளித்து வருகிறார்.

மூத்த டாக்டர்கள் குழு, பிசியோதெரபி நிபுணர்களின் தொடர் சிகிச்சையால் முதல்வரின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படத் தொடங்கி யது. 3 வாரத்துக்கு மேலாக செயற்கை சுவாசத்தில் இருந்த முதல்வர் கொஞ்சம் கொஞ்சமாக இயற்கையாகவே சுவாசிக்கத் தொடங்கினார்.

இதையடுத்து முதல்வருக்கு பொருத்தப்பட்டிருந்த செயற்கை சுவாசக் கருவிகள் அகற்றப்பட்டன. ஆனால், அவரது தொண்டை பகுதியில் பொருத்தப்பட்ட டியூப் மட்டும் அவசரத் தேவைக்காக அகற்றப்படவில்லை. உடல்நிலை யில் முன்னேற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை முதல்வர் கவனிக்கத் தொடங்கினார். தனக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்தும் டாக்டர்களிடம் தொடர்ந்து கேட்டறிந்துகொண்டே இருந்தார்.

முதல்வருக்கு உணவு முறை யிலும் மாற்றம் செய்ய டாக்டர்கள் முடிவு செய்தனர். அதன்படி திரவ உணவு மட்டுமே கொடுக்கப்பட்டு வந்த முதல்வருக்கு சிறிது சிறிதாக திட உணவுகளையும் கொடுக்கத் தொடங்கினர். கடந்த 4-ம் தேதி நிருபர்களிடம் பேசிய அப்போலோ மருத்துவமனை தலைவர் டாக்டர் பிரதாப் சி.ரெட்டி, ‘‘முதல்வரின் உடல்நிலை முழுமையாக குண மடைந்துள்ளது. மருத்துவ மனையில் இருந்து வீடு திரும்புவது பற்றி அவரே முடிவு செய்வார்’’ என்று தெரிவித்தார். இதைக் கேட்ட அதிமுகவினர் மகிழ்ச்சி அடைந்தனர்.

தனி வார்டுக்கு மாற்றம்

தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்து எப்போது வேறு வார்டுக்கு முதல்வர் மாற்றப்படுவார் என்ற ஆவலோடு அதிமுகவினர் காத்திருந்தனர். முதல்வரை வேறு வார்டுக்கு மாற்றுவது தொடர்பாக டாக்டர்களும், மருத்துவமனை நிர்வாகத்தினரும் கடந்த ஒரு வாரமாக தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில், 48 நாள் சிகிச் சைக்குப் பிறகு மருத்துவமனை யின் 2-வது தளத்தில் உள்ள தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்து நேற்று பகல் சுமார் 11 மணி அளவில் 4-வது தளத்தில் உள்ள ‘எல்’ வார்டு என்ற விஐபி வார்டுக்கு முதல்வர் மாற்றப்பட்டார். தனி வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ள முதல்வருக்கு தேவையான சிகிச்சைகளை டாக்டர்கள் தொடர்ந்து அளித்து வருகின்ற னர். முதல்வர் தனி வார்டுக்கு மாற்றப்பட்டது பற்றி டாக்டர்களிடம் கேட்டபோது, ‘‘முதல்வரின் உடல்நிலையில் நல்ல முன்னேற் றம் ஏற்பட்டுள்ளது. அவரது உடல் நிலை வேகமாக குணமடைந்து வருகிறது. இயற்கையாகவே சுவாசிக்கத் தொடங்கியுள்ளார். இனிமேல் அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கத் தேவை யில்லை. அதனால்தான் தனியாக உள்ள விஐபி வார்டுக்கு மாற்றப் பட்டுள்ளார். சாதாரண வார்டை விட, விஐபி வார்டு பெரிதாக இருக்கும். பார்வையாளர்கள் வார்டுக்குள் வந்து அமர்ந்து பேசலாம். டிவி உள்ளிட்ட அனைத்து வசதிகளும் இருக்கும்’’ என்றனர்.

நலம் விசாரிப்பு

முதல்வர் உடல்நலக் குறை வால் அனுமதிக்கப்பட்ட நாளில் இருந்து தினமும் அப்போலோ மருத்துவமனை நுழைவாயில் முன்பு அதிமுகவினர் சர்வமத பிரார்த்தனைகளை நடத்தி வருகின்றனர். முதல்வர் விரைவில் நலம் பெற வேண்டி சிறப்பு பூஜைகள், வழிபாடுகளை செய்து வருகின்றனர். தமிழகம் முழுவதும் கோயில்களில் சிறப்பு அபிஷேகம், பூஜைகள், யாகங்கள் நடத்தப்பட்டது. இதற் கிடையே, வெளிமாநில முதல் வர்கள், ஆளுநர்கள், மத்திய அமைச்சர்கள், பல்வேறு அரசியல் கட்சிகளின் தலை வர்கள், திரைத்துறையினர், தொழி லதிபர்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் அப்போலோ மருத்து வமனைக்கு வந்து முதல்வரின் உடல்நிலைப் பற்றி விசாரித்துச் செல்கின்றனர்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...