News
Loading...

5.5 கோடி பழைய நோட்டுகளுடன் தனி விமானத்தில் பறந்த தொழிலதிபர் சிக்கினார்

5.5 கோடி பழைய ரூபாய் நோட்டுகளுடன் தனி விமானத்தில் பறந்த தொழிலதிபர் சிக்கினார்..!

500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என கடந்த 8 ஆம் தேதி மத்திய அரசால் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், செல்லாது என அறிவிக்கபட்ட பழைய ரூபாய் நோட்டுகளுடன் தனி விமானத்தில் பறந்த தொழிலதிபர் சிக்கினார்.

ஹரியாணா மாநிலத்தின் சிர்சா நகரில் இருந்து காலை புறப்பட்டு நாகாலாந்து மாநிலத்தின் திமாப்பூர் நோக்கிச் சென்றார். விமானத்தில் பீகாரைச் சேர்ந்த தொழிலதிபர் ஏ.சிங் மட்டும் பயணம் செய்தார். தனி விமானத்தில் அவர் ஒருவர் மட்டும் பயணம் செய்வதை கண்டு அதிகாரிகள் சந்தேகித்தனர். விமானம் திமாப்பூரில் தரையிறங்கியவுடன் அதில் பயணம் செய்த சிங்கின் உடைமைகளை மத்திய பாதுகாப்பு அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் ரூ.5.5 கோடி இருப்பது கண்டறியப்பட்டது. அதையடுத்து அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

English Summary : 5.5 crore old currency seized from businessman

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...