News
Loading...

பாட்னா - இந்தூர் விரைவு ரயில் தடம்புரண்டு விபத்து: 91 பேர் உயிரிழப்பு

பாட்னா - இந்தூர் விரைவு ரயில் தடம்புரண்டு விபத்து: 65 பேர் உயிரிழப்பு

உத்தரப்பிரதேசத்தில் கான்பூர் அருகே பாட்னா - இந்தூர் விரைவு ரயில் தடம் புரண்ட விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 91 ஆக உயர்ந்துள்ளது. பலர் படுகாயம் அடைந்ததாக ரயில்வே வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. இருப்பினும் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

கான்பூர் அருகே புர்கராயம் என்ற இடத்தில் இன்று அதிகாலை பாட்னா - இந்தூர் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இதில் ரயிலின் 14 பெட்டிகள் தடம் புரண்டன. சம்பவ இடத்தில் மீட்பு பணியில் மீட்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர். மீட்பு பணிகளை உடனே மேற்கொள்ள டிஜிபிக்கு அம்மாநில முதலமைச்சர் அகிலேஷ் யாதவ் உத்தரவிட்டுள்ளார். இந்த விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்த மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் இது குறித்து ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபுவிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து மீட்பு பணிகளை துரிதமாக மேற்கொள்ளவும் ரயில்வே மீட்பு குழுக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும், இந்த விபத்துக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு கூறியுள்ளார்.

English Summary : 65  Dead After Patna-Indore Express Derails Near Kanpur

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...