News
Loading...

வேகநடைப் போட்டியில் வெற்றி நடை : தங்கம் வென்ற 92 வயது இளைஞர்

வேகநடைப் போட்டியில் வெற்றி நடை : தங்கம் வென்ற 92 வயது இளைஞர்

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற வேகநடைப் போட்டியில் முதல் முறையாக 92 வயதான இந்திய கடற்படை முன்னாள் வீரர் ஒருவர் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் உலக மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. 

92 வயதில் சாதனை:

90 முதல் 95 வயதுக்குட்பட்டோருக்கான 5000 மீட்டர் வேகநடைப் போட்டி நடந்தது. இதில், விசாகப்பட்டினத்தை சேர்ந்த இந்திய கடற்படையின் முன்னாள் அதிகாரியான ஸ்ரீராமுலு கலந்துகொண்டு தங்கம் வென்றார். ஸ்ரீராமுலு, இது தவிர, இந்த வாரம் நடைபெற உள்ள 10 கி.மீ. மற்றும் 20 கி.மீ. வேகநடைப் பந்தயங்களிலும் கலந்துகொள்கிறார். இவர் இதற்கு முன்பு நடைபெற்ற பல்வேறு மாஸ்டர்ஸ் தடகளப் போட்டிகளிலும் பங்கேற்று தங்கப் பதக்கங்கள் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...