News
Loading...

இந்தியாவின் 94 நகரங்களில் காற்று மாசுபாடு

இந்தியாவின் 94 நகரங்களில் காற்று மாசுபாடு

இந்தியாவின் தலைநகர் டெல்லியில் காற்று மாசு கடந்த சில நாட்களாக பெரிய பிரச்சினையாக இருந்து வருகிறது. டெல்லியில் காற்று மாசின் அளவு அதிகரித்துள்ளதால் நாளை முதல் 3 நாட்களுக்கு பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்குமாறு முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில், டெல்லியில் மட்டுமல்லாமல் இந்தியாவின் 94 நகரங்களில் காற்று மாசுபாடு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

காற்று மாசுபாடு அடைந்த நகரங்களின் பட்டியலை உலக சுகாதார நிறுவனம் சில தினங்களுக்கு முன்பு வெளியிட்டுள்ளது. அதில் காற்று மாசுபாட்டில் மோசமாக உள்ள நகரங்களில் முதல் 20 இடங்களில் இந்தியாவின் 10 நகரங்கள் இடம் பெற்றுள்ளன.

கடந்த 2011-ம் ஆண்டு முதல் 5 ஆண்டுகளில் நாட்டின் 94 நகரங்களில் காற்று தரமானதாக இல்லை. இந்த பட்டியலில் உள்ள நகரங்கள் பெரும்பாலும் 1990-களில் இடம்பெற்றிருந்தவையே என்று மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

தொடர்ச்சியாக காற்று மாசுபாடு உள்ள 29 நகரங்களை மாசு கட்டுப்பாட்டு வாரியம் கண்காணித்து வருகிறது.

English Summary : 94 cities haven't met air quality standards in 5 years

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...