News
Loading...

அனுஷ்காவுக்கு அடுத்த ஆண்டு திருமணம்

அனுஷ்காவுக்கு அடுத்த ஆண்டு திருமணம்

தமிழ், தெலுங்கில் முன்னணி இடம் பிடித்திருப்பவர் அனுஷ்கா. இவருக்கு வயது முப்பதை தாண்டி விட்டதால் திருமணம் எப்போது என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

சமீபத்தில் இவர் பற்றிய காதல் கிசு கிசு ஒன்று பரவியது. ஆனால் இவரது பெற்றோர் பார்க்கும் மாப்பிள்ளையை தான் அனுஷ்கா மணப்பார் என்று இப்போது தகவல் வெளியாகி இருக்கிறது. இவருக்கு நல்ல மணமகன் அமைந்து திருமணம் நடக்க வேண்டும் என்று இவரது பெற்றோர் விரும்புகிறார்கள். இதற்காக சில பூஜைகளும் நடத்தி இருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது.

அனுஷ்கா ஏற்கனவே ஒப்புக்கொண்ட படங்களில் மட்டும்தான் தற்போது நடித்து வருகிறார். புதிய படங்கள் எதிலும் நடிக்க இதுவரை ஒப்புக்கொள்ளவில்லை. எனவே வரும் புதிய ஆண்டில் அனுஷ்கா திருமணம் செய்து கொள்வார் என்று தெலுங்கு பட உலகில் பேசிக்கொள்கிறார்கள்.

English Summary : Actress Anushka Shetty marriage next year

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...