News
Loading...

உஷார் - வாட்ஸ் அப்பில் வீடியோகால் இன்வைட்டா?

Beware of this WhatsApp video calling invite

வாட்ஸ்-ஆப் வீடியோ காலிங்-ஐ ஆக்டிவேட் செய்ய இந்த லிங்க்-ஐ கிளிக் செய்யுங்கள் என்று குறுஞ்செய்தி வந்தால் கவனமாக இருங்கள்.

முன்னதாக, வாட்ஸ்-ஆப், வாய்ஸ் காலிங்-ஐ அறிமுகம் செய்த போது, அதை ஆக்டிவேட் செய்ய வாடிக்கையாளர்களுக்கு குறுஞ்செய்திகளை அனுப்பியது. 

ஆனால், வீடியோ காலிங்-ஐ பொறுத்தவரை, ஏற்கனவே ஃபோனில் இருக்கும் வாட்ஸ்-ஆப் செயலியை, கூகுள் ஃப்ளேஸ்டோரில் அப்டேட் செய்தாலே போதுமானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது, your phone invite WhatsApp video call என்ற  குறுஞ்செய்தி பரவலாக பகிரப்பட்டு வருகிறது.

ஹேக்கர்கள் இந்த வகையான குறுஞ்செய்திகள் மூலம் தகவல்களை திருட வாய்ப்பு இருப்பதாக தெரியவந்துள்ளது.  

எனவே வீடியோ காலிங் அல்லது 'குரூப் வீடியோ காலிங்' ஆக்டிவேட் செய்ய குறுஞ்செய்தி வந்தால் அதை தவிர்ப்பது சிறந்தது.  

English Summary : Beware of this WhatsApp video calling invite

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்


Loading...